ஏழை நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் தடுப்பூசிகள் வழங்கி உதவ வேண்டும்-உலக சுகாதார அமைப்பு


ஏழை நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் தடுப்பூசிகள் வழங்கி உதவ வேண்டும்-உலக சுகாதார அமைப்பு
x
தினத்தந்தி 8 Jun 2021 9:03 AM GMT (Updated: 8 Jun 2021 9:03 AM GMT)

ஏழை நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் தடுப்பூசிகளை வழங்கி உதவ வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜெனிவா

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் நிருபர்களிடம் கூறியதாவது:-

 ஆறு வாரங்களாக உலகளவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.  நான்கு வாரங்களாக இறப்பு எண்ணிக்கையும் சரிந்துள்ளது. தடுப்பூசி போடும் பணிகளில், உலக நாடுகளிடையே ஏற்றத் தாழ்வுகள் இருக்கிறது.

மேற்கத்திய நாடுகளில் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மற்ற நாடுகளுக்கு அதிக அளவில் தடுப்பூசி வழங்க அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் முன் வரவேண்டும் . உலகம் முழுவதும் பரவலாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டால் மட்டுமே, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தொற்று பரவலை குறைக்க முடியும். என கூறினார்

அமெரிக்காவில் தேவைக்கு அதிகம் உள்ள 2 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களை மற்ற நாடுகளுக்கு வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story