உலக செய்திகள்

துருக்கியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53 லட்சத்தை தாண்டியது + "||" + 6,609 new cases of corona have been confirmed in the last 24 hours, in Turkey

துருக்கியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53 லட்சத்தை தாண்டியது

துருக்கியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53 லட்சத்தை தாண்டியது
துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,609 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அங்காரா,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது.  

இதனிடையே துருக்கி நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனாவின் 2-வது அலை காரணமாக பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வந்தநிலையில் தற்போது தொற்றின் பாதிப்புகள் குறைய தொடங்கி உள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் துருக்கி தற்போது 5-வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 6,609 ஆக பதிவாகி உள்ளது. இதன்மூலம் துருக்கி நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 53,00,236 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 86 பேர் உயிரிழக்க, கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 43,341 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 51,73,186 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 78,709 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.89 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17.95 கோடியை தாண்டியது.
2. சீனாவில் புதிதாக 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
3. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.85 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17.92 கோடியை தாண்டியது.
4. சீனாவில் புதிதாக 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
5. புனே மற்றும் ஐதராபாத்தில் இருந்து 4 லட்சத்து 70 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 2 கோடியே 15 லட்சத்து 33 ஆயிரத்து 790 தடுப்பூசிகள் வந்து உள்ளன.