உலக செய்திகள்

சீனாவில் புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Corona infection confirmed in 16 new people in China

சீனாவில் புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சீனாவில் புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா பரவல் தலைகாட்டத் துவங்கியுள்ளது.
பீஜிங், 

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி சீனாவில் புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 33 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தவிர 9 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. தற்போதைய நிலவரப்படி குவாங்டாங் மாகாணத்தில் தொற்று பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 91,316 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636  பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. துருக்கியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53 லட்சத்தை தாண்டியது
துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,609 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனா தடுப்பில் சுப்ரீம் கோர்ட்டு பணி: பாராட்டி கடிதம் எழுதிய சிறுமி; பரிசு அனுப்பிய தலைமை நீதிபதி
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த 10 வயது சிறுமி எழுதிய கடிதம் எழுதி உள்ளார்.
3. சீனா: 480 கி.மீ. வழிமாறி வந்த களைப்பு - ஓய்வு எடுக்கும் யானைகள்
சீனாவில் உள்ள நகரத்திற்குள் 15 காட்டு யானைகள் கூட்டமாக நுழைந்துள்ளன.
4. கொரோனாவை பரப்பியதாக 10 டிரில்லியன் டாலர் இழப்பீடு கேட்ட டிரம்ப்: சீனா பதிலடி
கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து நாடுகளுக்கும் நஷ்ட ஈடாக 10 ட்ரில்லியன் டாலர்கள் சீனா கொடுக்க வேண்டும் என டிரம்ப் கூறியிருந்தார்.
5. மே.வங்கத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து
மேற்கு வங்கத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.