உலக செய்திகள்

இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 7,540 பேருக்கு தொற்று உறுதி + "||" + UK records 7,540 COVID-19 cases, 6 deaths

இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 7,540 பேருக்கு தொற்று உறுதி

இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 7,540 பேருக்கு தொற்று உறுதி
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
லண்டன்,

இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் முதன் முதலாக கண்டறியப்பட்டதாக கூறப்படும் டெல்டா வகை கொரோனா பரவலால் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. 

கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 7,540 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 45,35,754 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 860 ஆக உயர்ந்துள்ளது. 

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 42 லட்சத்து 81 ஆயிரத்து 627 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 1,26,267 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷ்யாவில் புதிதாக 10,407 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 399 பேர் பலி
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 51.56 லட்சத்தைக் கடந்துள்ளது.
2. கொரோனா பாதிப்பு: ஆந்திராவில் மேலும் 77 பேர் உயிரிழப்பு
ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,796 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மோடியின் கவுரவத்தை காப்பாற்றவே முக்கியத்துவம்: கொரோனா பாதிப்பு, மரணங்களை மத்திய அரசு மறைத்து வருகிறது: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
கொரோனா பாதிப்பு, மரணம் தொடர்பான உண்மையான தகவல்களை மத்திய அரசு மறைத்து வருகிறது. மோடியின் கவுரவத்தை காப்பாற்றவே முக்கியத்துவம் தரப்படுகிறது என்று பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.
4. கர்நாடகாவில் புதிதாக 11,958- பேருக்கு கொரோனா தொற்று
கர்நாடகாவில் இன்று புதிதாக 11,958- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டியத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் குறைந்தது
மராட்டியத்தில் கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.