உலக செய்திகள்

டிக் டாக் செயலி: டிரம்பின் உத்தரவை ரத்து செய்தார் ஜோ பைடன் + "||" + President Biden revokes Trump executive orders targeting TikTok and WeChat and issues fresh order

டிக் டாக் செயலி: டிரம்பின் உத்தரவை ரத்து செய்தார் ஜோ பைடன்

டிக் டாக் செயலி: டிரம்பின் உத்தரவை ரத்து செய்தார் ஜோ பைடன்
சீன செயலிகளான டிக் டாக் மற்றும் வீ சாட்டிற்கு முன்னாள் அதிபர் டிரம்ப் தடை விதிக்க நடவடைக்கைகளை மேற்கொண்டார்.
வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டிக் டாக் மற்றும் வீ சாட் ஆகிய சீன செயலிகளின் புதிய பதிவிறக்கங்களுக்கு தடை விதித்திருந்த முன்னாள் அதிபர் டிரம்பின் உத்தரவுகளை  ஜோ பைடன் ரத்து செய்துள்ளார். 

சீன செயலிகளான டிக் டாக் மற்றும் வீ சாட்டிற்கு முன்னாள் அதிபர் டிரம்ப் தடை விதிக்க நடவடைக்கைகளை மேற்கொண்டார். 

புதிய பயனர்கள் இந்த  செயலிகளையும் பதிவிறக்கம் செய்ய முடியாதபடி தடை உத்தரவு பிறப்பித்தார். நடைமுறைக்கு வராத அந்த உத்தரவுகளை நீதிமன்றங்கள் தடுத்தன. இந்நிலையில் அதிபர் ஜோ பைடன், டிக் டாக், வீ சாட்டிற்கு எதிரான டிரம்பின் நிர்வாக உத்தரவுகளை ரத்து செய்து கையெழுத்திட்டிருக்கிறார். 

அதே சமயம் அந்த செயலிகள் கொண்டிருக்கும் பாதுகாப்பு பிரச்னைகள் பற்றி ஆராய புதிய வணிக துறை ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளார். முன்னர் தனியாக அமைக்கப்பட்ட அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆய்வும் தொடரும் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க விசா: டிரம்ப் கொண்டு வந்த மாற்றம் ரத்து: கோர்ட்டு அதிரடி
அமெரிக்க விசா தொடர்பாக டிரம்ப் கொண்டு வந்த மாற்றங்களை ரத்து செய்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
2. ஆப்கானிஸ்தான் நெருக்கடி: ‘ஜோ பைடனின் நடவடிக்கை முட்டாள்தனமானது’ - டிரம்ப்
ஆப்கானிஸ்தான் நெருக்கடி சூழலில், ஜோ பைடனின் நடவடிக்கை முட்டாள்தனமானது என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
3. ஆப்கானிஸ்தான் நாட்டை கட்டமைப்பதற்காக அமெரிக்க படைகள் செல்லவில்லை- ஜோ பைடன் விளக்கம்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவத்தை திரும்பப் பெறும் முடிவில் உறுதியாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
4. ஆப்கானிஸ்தானின் வீழ்ச்சிக்கு பொறுப்பேற்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பதவி விலக வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கிய பின்னர் வேகமாக முன்னேறி வந்த தலீபான்கள் நேற்று முன்தினம் தலைநகர் காபூலை கைப்பற்றியதன் மூலம் முழு ஆப்கானிஸ்தானையும் தங்கள் வசம் ஆக்கினார்.
5. பாகிஸ்தானில் 4-வது முறையாக டிக் டாக்கிற்கு தடை விதிப்பு
கோர்ட்டு உத்தரவின்படி ஆட்சேபத்துக்குரிய பதிவுகளை நீக்க தவறியதாக கூறி டிக் டாக் செயலிக்கு பாகிஸ்தான் தொலை தொடர்பு ஆணையம் நேற்று மீண்டும் தடை விதித்தது.