உலக செய்திகள்

பிரேசிலில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று + "||" + Brazil reports 2,208 COVID deaths in 24 hours -ministry

பிரேசிலில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

பிரேசிலில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று
பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளது.
பிரசிலியா,

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் 3-ஆம் இடத்தில் உள்ளது பிரேசில். தென் அமெரிக்க நாடான பிரேசில் உயிரிழப்பு எண்ணிக்கையில் 2- ஆம் இடத்தில் உள்ளது. அந்நாட்டில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவியதாலும் பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது.  தொற்று பாதிப்பு குறைந்து இருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. 

உலக நாடுகளின் கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிடும் வேர்ல்டோ மீட்டர்ஸ் தரவுகளின் படி, பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 84 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 71  லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை  4,79,515- ஆக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீர், அரியானா - கொரோனா பாதிப்பு விவரம்
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.
2. இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 7,540 பேருக்கு தொற்று உறுதி
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
3. ரஷ்யாவில் புதிதாக 10,407 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 399 பேர் பலி
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 51.56 லட்சத்தைக் கடந்துள்ளது.
4. கொரோனா அடுத்த அலையில் குழந்தைகளுக்கு தீவிர பாதிப்பா? எய்ம்ஸ் இயக்குநர் விளக்கம்
கொரோனா மூன்றாவது அலையில், குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த சான்றும் இல்லை என, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
5. தெலுங்கானாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு
தெலுங்கானாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.