உடல் மெலிந்த நிலையில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்..!


|  Photo Credit: AP (File Photo)
x
| Photo Credit: AP (File Photo)
தினத்தந்தி 9 Jun 2021 11:42 PM GMT (Updated: 9 Jun 2021 11:42 PM GMT)

புகைபிடிக்கும் பழக்கம் கொண்ட கிம் ஜாங் உன், உடல் நிலை பற்றி கடந்த சில ஆண்டுகளாகவே செய்திகள் உலா வருகின்றன.

பியாங்யாங்,

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த சில மாதங்களாக பொது வெளியில் தோன்றாமல் இருந்தார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு பயந்து அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை என்று பரவலாக சமூக வலைத்தளங்களிலும் விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில், சுமார்  4 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக பொது வெளியில் கிம் ஜாங் உன் கலந்து கொண்டுள்ளார்.  இதற்கு முன்பு இருந்ததை விட உடல் மெலிந்த நிலையில் கிம் ஜாங் உன் தற்போது தோற்றமளிக்கிறார். இதனால், அவரது உடல் நிலை குறித்தும் ஊகங்கள் எழத்தொடங்கியுள்ளன. 

புகைபிடிக்கும் பழக்கம் கொண்ட கிம் ஜாங் உன், உடல் நிலை பற்றி கடந்த சில ஆண்டுகளாகவே செய்திகள் உலா வருகின்றன. கடந்த 2014- ஆம் ஆண்டு 6 வாரங்களுக்கு திடீரென பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் கிம் ஜாங் உன் இருந்தார்.  2011- ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 50 கிலோ எடை அதிகரித்த கிம் ஜாங் உன்  கடந்த நவம்பர் மாதம் 140- கிலோ எடையுடன் இருந்ததாக கூறப்படுகிறது. அதீத உடல் எடை காரணமாக அவர் இருதய நோய் பாதிப்புக்கு  ஆளாகலாம் எனவும் ஊடகங்கள் செய்திகள் வெளிவந்தன. 


Next Story