உலக செய்திகள்

அமெரிக்காவில் டிக்டாக் உள்ளிட்ட 8 சமூக வலைதளங்களை தடை செய்வதற்கான ஆணையை திரும்ப பெற்றார் ஜோ பைடன் + "||" + Joe Biden withdraws ban on 8 social networking sites in the US

அமெரிக்காவில் டிக்டாக் உள்ளிட்ட 8 சமூக வலைதளங்களை தடை செய்வதற்கான ஆணையை திரும்ப பெற்றார் ஜோ பைடன்

அமெரிக்காவில் டிக்டாக் உள்ளிட்ட 8 சமூக வலைதளங்களை தடை செய்வதற்கான ஆணையை திரும்ப பெற்றார் ஜோ பைடன்
அமெரிக்காவில் டிக்டாக், விசாட் உள்ளிட்ட 8 சமூக வலைதளங்களை தடை செய்வதற்கான ஆணையை அதிபர் ஜோ பைடன் திரும்ப பெற்றுள்ளார்.
வாஷிங்டன்,

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த ஆண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டாக், விசாட் உள்ளிட்ட 8 சமூக வலைதளங்களை அமெரிக்காவில் தடை செய்வதற்கான நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார். இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடன், பதவியேற்றது முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். இதற்கிடையில் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்களையும் அவர் செய்துள்ளார். அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக அவர் செய்துள்ள மாற்றங்கள் குறிப்பிடத்தகுந்தவை ஆகும்.

அந்த வகையில் முன்னாள் அதிபர் டிரம்ப் பிறப்பித்திருந்த டிக்டாக், விசாட் உள்ளிட்ட 8 சமூக வலைதளங்களை தடை செய்வதற்கான ஆணையை அதிபர் ஜோ பைடன் திரும்ப பெற்றுள்ளார். மேலும் டிக்டாக் உள்ளிட்ட செயலிகள் அமெரிக்க பயனாளர்களின் தகவல்களை திருடுவதாக முந்தைய அரசு குற்றம் சாட்டியிருந்த நிலையில், இந்த செயலிகளுக்கான புதிய விதிகளை உருவாக்க விரிவான கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பயங்கர காட்டுத் தீ
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் ஒரே சமயத்தில் 2 இடங்களில் பயங்கர காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது
2. அமெரிக்காவில் இதுவரை 30.2 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 30.2 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. அமெரிக்காவில் இதுவரை 30 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 30 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு-2 பேர் பலி
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
5. அமெரிக்காவில் 29.7 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 29.7 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.