92 நாடுகளுக்கு 50 கோடி கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைக்க முடிவு - ஜோ பைடன்


92 நாடுகளுக்கு 50 கோடி கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைக்க முடிவு - ஜோ பைடன்
x
தினத்தந்தி 10 Jun 2021 12:10 PM GMT (Updated: 10 Jun 2021 12:10 PM GMT)

92 நாடுகளுக்கு 50 கோடி கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

50 கோடி பைசர் தடுப்பூசிகளை வாங்கி 92 நாடுகளுக்கு வழங்குவது குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட உள்ளார்.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

அமெரிக்கா 50 கோடி பைசர் தடுப்பூசிகளை வாங்கி அதை குறைந்த மற்றும் நடுத்தரத்துக்கும் குறைவான வருவாய் உள்ள நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் என 92 நாடுகளுக்கு வழங்குவது குறித்த அறிவிப்பை அதிபர் பைடன் இன்று அறிவிக்க உள்ளார். இவை ஆகஸ்ட் 2021 முதல் விநியோகிக்கப்பட உள்ளன. 20 கோடி தடுப்பூசிகள் இந்தாண்டு இறுதிக்குள் விநியோகிக்கப்படும். மீதமுள்ள 30 கோடி தடுப்பூசிகள் 2022 முதல் பாதிக்குள் விநியோகிக்கப்படும்.

இந்தியா, நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உள்பட பல்வேறு ஆசிய நாடுகளுக்கு 70 லட்சம் தடுப்பூசிகளை அனுப்ப ஜோ பைடன் நிர்வாகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story