உலக செய்திகள்

சீனாவில் மாணவர்களை கவர பெண்களை பயன்படுத்திய பல்கலைக்கழகம் + "||" + University that used women to attract students in China

சீனாவில் மாணவர்களை கவர பெண்களை பயன்படுத்திய பல்கலைக்கழகம்

சீனாவில் மாணவர்களை கவர பெண்களை பயன்படுத்திய பல்கலைக்கழகம்
சீனாவில் நாஞ்சிங் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இது அந்த நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

அங்கு சீன தேசிய கல்லூரி நுழைவுத்தேர்வு கடந்த திங்கட்கிழமை நடந்தது. அப்போது சமூக வலைத்தளத்தில் நாஞ்சிங் பல்கலைக்கழகத்தின் சார்பில் பெண்களை பயன்படுத்தி, மாணவர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் விளம்பரம் வெளியிட்டனர். அதில் இடம்பெற்றிந்த 2 புகைப்படங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டன. ஏனென்றால் அதில் ஒன்றில் அழகான ஒரு பெண், “காலை முதல் இரவு வரையில் என்னுடன் நூலகத்தில் இருக்க விரும்புகிறீர்களா? ” எனவும், மற்றொன்றில் இன்னொரு பெண் “ நான் உங்கள் இளமையின் ஒரு அங்கமாக மாற விரும்புகிறீர்களா? ” எனவும் கூறும் வாசகங்களைக் கொண்ட அட்டைகளை ஏந்திப்பிடித்திருந்தனர். இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் கண்டித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகளை செய்தனர்.

ஒருவர், “ஒரு சிறந்த பல்கலைக்கழகமாக மாணவ, மாணவிகளை கவர்ந்து இழுக்க சூடான ஆண்களையும், அழகான பெண்களையும் பயன்படுத்துவதற்குப் பதிலாக தனது வளங்கள் மற்றும் ஆசிரியர்களின் தரத்தின் அடிப்படையில் மாணவர்களை சேர்க்க வேண்டும்” என கூறி இருந்தார். கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து அந்த விளம்பரத்தை நாஞ்சிங் பல்கலைக்கழகம் நீக்கியது.


தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் குடியிருப்பு பகுதியில் எரிவாயு குழாய் உடைப்பு ஏற்பட்டு விபத்து - 12 பேர் உயிரிழப்பு
சீனாவின் ஷியான் நகரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் எரிவாயு குழாயில் உடைப்பு ஏற்பட்டு வெடித்ததால் 12 பேர் உயிரிழந்தனர்.
2. சீனா செல்வதற்காக காத்திருக்கும் இந்தியர்களுக்கு விசா வழங்க வேண்டும் - இந்திய அரசு வலியுறுத்தல்
சீனாவிற்கு செல்வதற்காக காத்திருக்கும் இந்தியர்களுக்கு விசா வழங்குமாறு, சீன அரசை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
3. சீனாவில் மீண்டும் கொரோனா பரவல்: புதிதாக 35 பேருக்கு தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா பரவல் தலைகாட்டத் துவங்கியுள்ளது.
4. சீனாவின் கான்சினோ தடுப்பூசிக்கு அர்ஜெண்டினா அரசு அவசர கால அனுமதி
அவசர காலத்தில் பயன்படுத்துவதற்காக சீனாவின் கான்சினோ தடுப்பூசிக்கு அர்ஜெண்டினா அரசு ஓப்புதல் அளித்துள்ளது.
5. சீனாவில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா பரவல் தலைகாட்டத் துவங்கியுள்ளது.