உலக செய்திகள்

படகு பழுதானதால் துபாயில், நடுக்கடலில் தத்தளித்த ஸ்பெயின் நாட்டு குடும்பத்தினர்; போலீஸ் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர் + "||" + Spanish family stranded in Mediterranean due to boat wreck; Police rescue crews rescued him safely

படகு பழுதானதால் துபாயில், நடுக்கடலில் தத்தளித்த ஸ்பெயின் நாட்டு குடும்பத்தினர்; போலீஸ் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்

படகு பழுதானதால் துபாயில், நடுக்கடலில் தத்தளித்த ஸ்பெயின் நாட்டு குடும்பத்தினர்; போலீஸ் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்
துபாய் நகரின் ஜுமைரா பகுதியில் உள்ள கடல் பகுதிக்கு படகு ஒன்றின் மூலம் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 6 பேர் சென்றனர்.

அவர்கள் கடலின் அழகை ரசித்து மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டு சென்றனர். அப்போது திடீரென அவர்கள் சென்ற படகு பழுதாகி நடுக்கடலில் நின்றது. அந்த இடம் மிகவும் ஆபத்தான பகுதி என்பதால் படகில் இருந்தவர்கள் என்ன செய்வதென தெரியாமல் திகைத்தனர். பின்னர் அவர்கள் போலீசின் உதவியை நாடினர். அதன்பேரில் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து பழுதான படகில் இருந்த 6 பேரும் போலீசாரின் மீட்பு படகு மூலம் கடற்கரைக்கு பத்திரமாக மீட்டு அழைத்து வரப்பட்டனர். பழுதான படகையும் போலீசார் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

இது குறித்து துபாய் கடல் பகுதி மீட்பு குழுவின் தலைவர் அலி அப்துல்லா அல் நக்பி கூறுகையில், ‘‘கடல் பகுதிக்கு செல்பவர்கள் போலீசாரின் உதவி செயலியை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த செயலி மூலம் ஆபத்து ஏற்பட்டாலோ, படகு பழுதாக இருந்தாலோ அதன் மூலம் தகவல் தெரிவித்தால் மீட்பு குழுவின் மூலம் தேவையான உதவிகள் வழங்கப்படும்’’ என்றார்.

பழுதான படகில் இருந்து மீட்கப்பட்ட குடும்பத்தினர் துபாய் போலீசாரின் விரைவான உதவிக்கு நன்றி தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. துபாய்: இந்தியாவுக்கு புறப்பட இருந்த 2 விமானங்கள் மோத இருந்த விபரீதம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாய் விமான நிலையத்தில், இந்தியாவுக்கு புறப்பட இருந்த இரண்டு விமானங்கள் மோத இருந்து, பின் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது தற்போது தெரிய வந்துள்ளது.
2. ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த ஸ்பெயினில் முக கவசம் கட்டாயம்
ஒமைக்ரான் பரவலைக்கட்டுப்படுத்த ஸ்பெயினில் முக கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
3. கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் சாதனை படைக்கும் இந்தியா..!
இந்தியாவில் மாதம் ஒன்றுக்கு 31 கோடி கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் திறன் உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
4. ஷாருக்கான் பிறந்தநாள் துபாயில் கொண்டாட்டம் !
புர்ஜ் காலிபாவில் ஷாருக்கான் குறித்து ‘நாங்கள் உங்களை நேசிக்கிறோம்’ எனும் வாசகம் ஒளிபரப்பப்பட்டது.
5. ஐ.பி.எல்.அணியை வாங்குமா...? இங்கிலாந்து மான்செஸ்டர் கால்பந்து கிளப்
மான்செஸ்டர் யுனைடெட் அணியின் உரிமையாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வருகை தந்துள்ளனர்.