உலக செய்திகள்

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 88,092 பேருக்கு கொரோனா + "||" + Corona positive to 88,092 people in the last 24 hours in Brazil

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 88,092 பேருக்கு கொரோனா

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 88,092 பேருக்கு கொரோனா
பிரேசில் இதுவரை பதிவு செய்யப்பட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.7 கோடியாக ஆக அதிகரித்துள்ளது.
பிரேசிலியா,

உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் முதல் இடத்தில் அமெரிக்காவு, இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. இதை தொடர்ந்து 3வது இடத்தில் தென் அமெரிக்க நாடான பிரேசில் உள்ளது. கொரோனாவின் 2 அலைகளாலும் பிரேசில் மக்கள் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில் பிரேசில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 88,092 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரேசிலில் இதுவரை பதிவு செய்யப்பட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,72,10,969 ஆக அதிகரித்துள்ளது.

அதே சமயம் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,504 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், அங்கு இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,82,019 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பிரேசிலில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆரம்பத்திலேயே தொற்று பரவலை கட்டுப்படுத்த தவறியதாக அந்நாட்டு அதிபர் ஜெயிர் போல்சனரோ மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,032 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
ஒடிசா மாநிலத்தில் தற்போது 69,333 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. பிரேசிலில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று
பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளது.
3. புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 642 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் தற்போது 6,853 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4. மராட்டிய மாநிலத்தில் இன்று 12,557 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 14,433 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
5. கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 25,659 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
கர்நாடக மாநிலத்தில் தற்போது 2,54,505 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.