உலக செய்திகள்

டுவிட்டருக்கு தடை: இந்தியாவின் 'கூ’ செயலியில் அதிகாரப்பூர்வ கணக்கு தொடங்கிய நைஜீரிய அரசு! + "||" + Nigeria Government Joins Koo Days After Banning Twitter; Indian App's Co-founder Reacts

டுவிட்டருக்கு தடை: இந்தியாவின் 'கூ’ செயலியில் அதிகாரப்பூர்வ கணக்கு தொடங்கிய நைஜீரிய அரசு!

டுவிட்டருக்கு தடை: இந்தியாவின் 'கூ’ செயலியில் அதிகாரப்பூர்வ கணக்கு தொடங்கிய நைஜீரிய அரசு!
இந்தியாவில் உருவாக்கப்பட்ட 'கூ’ செயலியில் நைஜீரிய அரசு அதிகாரப்பூர்வ கணக்கு தொடங்கியுள்ளது.
அபுஜா,

நைஜீரிய நாட்டின் அதிபராக செயல்பட்டு வருபவர் முகமது புஹாரி. இதற்கிடையில், நைஜீரியாவில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சிவில் போர் ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.

இதனை தொடர்ந்து, 1967-70 வரை நைஜீரியாவில் நடைபெற்ற உள்நாட்டு சண்டையை மேற்கொள் காட்டி அதிபர் முகமது தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதிபரின் கருத்து வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக கூறி அதை அதிபரின் வலைதள பக்கத்தில் இருந்து டுவிட்டர் நிறுவனம் நீக்கியது.

அதிபரின் டுவிட்டர் பதிவை நீக்கியதால் ஆத்திரமடைந்த நைஜீரிய அரசு டுவிட்டருக்கு தடை விதித்தது. டுவிட்டரில் இருந்து வெளியேறிய நைஜீரியா அரசு தங்கள் நாட்டில் பொதுமக்கள் டுவிட்டர் பயன்படுத்தவும் தடைவிதித்தது. தடையை மீறி டுவிட்டர் பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், டுவிட்டருக்கு தடை விதித்த நைஜீரிய அரசு அதற்கு பதிலாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‘கூ’ செயலியில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கியுள்ளது. 

’கூ’ செயலியில் நேற்றுமுன்தினம் நைஜீரிய அரசின் அதிகாரப்பூர்வ தொடங்கப்பட்டுள்ளது. அரசின் அதிகாரப்பூர்வ தகவல்கள் இனி ’கூ’ மூலமாகவே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக ’கூ’ செயலி மூலம் அரசின் செயல்பாடுகள் தொடர்பான தகவல்களை நைஜீரிய அரசு பகிர்ந்து வருகிறது. இந்த நிகழ்வு உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நைஜீரிய அரசு ’கூ’ செயலியில் இணைந்ததற்கு ’கூ’ செயலியை உருவாக்கியவர்களில் ஒருவரான ராதாகிருஷ்ணா வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ’கூ’ தளத்தில் இணைந்த நைஜீரிய அரசை வரவேற்கிறோம். ’கூ’ தளம் தற்போது தனது சிறகை இந்தியாவை கடந்து பரப்பத்தொடங்கியுள்ளது’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. எதிரிகள் சுற்றி வளைத்ததால் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பின் தலைவன் தற்கொலை
எதிரிகள் சுற்றி வளைத்ததால் வெடிகுண்டை வெடிக்கச்செய்து போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பின் தலைவன் தற்கொலை செய்துகொண்டான்.
2. நைஜீரியாவில் டுவிட்டருக்கு தடை விதிப்பு; அதிபரின் பதிவை நீக்கியதால் நடவடிக்கை
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த 1967-ம் ஆண்டு முதல் 1970-ம் ஆண்டு வரை உள்நாட்டு போர் நடந்தது.
3. நைஜீரியா பள்ளியில் துப்பாக்கி முனையில் 200 குழந்தைகள் கடத்தல்
நைஜீரியா பள்ளியில் துப்பாக்கி முனையில் 200 குழந்தைகள் கடத்தப்பட்டனர்.இது குறித்து நைஜீரியா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
4. நைஜீரியா: ஏப்ரல் மாதம் கடத்தப்பட்ட 14 மாணவிகளை விடுதலை செய்த பயங்கரவாதிகள்
நைஜீரியாவில் ஏப்ரல் மாதம் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள் 14 மாணவிகளை கடத்திச்சென்றுள்ளனர்.
5. நைஜீரியாவில் படகு விபத்தில் 50 பேர் பலி - 100 பேரின் கதி என்ன?
நைஜீரியாவில் பயணிளை ஏற்றி சென்ற படகு இரண்டாக உடைந்து ஏரியில் மூழ்கிய விபத்தில் 50 பேர் பலியாகினர். 100 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை.