கோவேக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு

கோவேக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 11 Jun 2021 9:55 AM GMT (Updated: 11 Jun 2021 9:55 AM GMT)

கொரோனா அவசரகால தேவைக்காக கோவேக்சின் தடுப்பூசியை பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி மறுத்துள்ளது.

வாஷிங்டன்,

கொரோனா அவசரகால தேவைக்காக கோவேக்சின் தடுப்பூசியை பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி மறுத்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. கோவேக்சின் தடுப்பூசி இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளின் அவசரகால தேவைக்கு அனுமதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகின்றது.

இதனிடையே பாரத் பயோடெக் நிறுவனத்தின் அமெரிக்க ஒப்பந்ததாரரான ஒகுஜென் நிறுவனம் சார்பில் கோவேக்சின் தடுப்பூசியை அமெரிக்காவில் அவசரகால தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி கோரியிருந்தது. இந்நிலையில், கோவேக்சின் தடுப்பூசியை பயன்படுத்த ஒகுஜென் நிறுவனம் அளித்த கோரிக்கையை அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு நிராகரித்துள்ளது. 

Next Story