உலக செய்திகள்

பாகிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பேர் பலி + "||" + 20 Pilgrims Die, 10 Critically Injured In Pakistan Bus Crash

பாகிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பேர் பலி

பாகிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பேர் பலி
பாகிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகினர்.
இஸ்லமாபாத்,

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் கூழ்தர் பகுதியில் இருந்து லர்கனோ பகுதிக்கு பயணிகளுடன் சென்ற பேருந்து கவிழ்ந்து  விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் பலியானார்கள். 30 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைகிடமாக உள்ளது. பேருந்து அதிவேகமாகச் சென்று வளைவில் திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் அளவுக்கதிமாக பயணிகள்  பயணித்ததாகவும் பேருந்தின் மேற்கூரையில் கூட பயணிகள் பயணித்து வந்துள்ளனர் எனவும் உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.  

மேலும் விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பேருந்தில் பயணித்தவர்கள் கூழ்தர் பகுதியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு சொந்த ஊர் திரும்பியவர்கள் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான்: போலியோ சொட்டு மருந்து போடும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு சென்ற போலீசார் மீது துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலி
பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து போடும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு சென்ற போலீசார் மீது மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
2. பாகிஸ்தான்: எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மோதிய விபத்து - பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு
பாகிஸ்தானில் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மோதிய உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.
3. பாகிஸ்தானில் 2 விரைவு ரயில்கள் மோதிய விபத்தில் சிக்கி 30 பேர் பலி: பலர் காயம்
பாகிஸ்தானில் 2 விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. பாகிஸ்தான்: 12 இந்திய தூதரக அதிகாரிகள் - குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று
இந்திய தூதரக அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று தனிமைபடுத்தப்பட்டு உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.
5. பாகிஸ்தான்: பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் குண்டுவெடிப்பு - 7 பேர் பலி
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பாகிஸ்தானில் நடைபெற்ற பேரணியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 7 பேர் உயிரிழந்தனர்.