இஸ்ரேலில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய கோழி முட்டை கண்டுடெடுப்பு


Image courtesy : ASSAF PEREZ/ISRAEL ANTIQUITIES AUTHORITY
x
Image courtesy : ASSAF PEREZ/ISRAEL ANTIQUITIES AUTHORITY
தினத்தந்தி 11 Jun 2021 12:43 PM GMT (Updated: 11 Jun 2021 12:43 PM GMT)

இஸ்ரேலில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோழி முட்டை உடையாமல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெருசலேம்

இஸ்ரேலில்  யவ்னே  நகரில் நடந்த அகழாய்வின்போது கழிவுநீர் தொட்டியிலிருந்து தொல்பொருள் ஆய்வாளர்கள் இந்த கோழி முட்டையை கண்டெடுத்துள்ளனர்.

இந்த முட்டை இத்தனை ஆண்டுகளாக கெட்டு போகாமலும், சேதம் அடையாமலும் இருப்பது ஆய்வாளர்களுக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. முட்டையின் ஓட்டை வைத்து அதன் பழமையை கண்டுபிடித்த ஆய்வாளர்கள், முட்டையின் அடிப்பகுதியில் லேசான விரிசல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

கழிவுநீர் தொட்டியிலிருந்து முட்டையுடன், பழங்கால பொம்மைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன் முட்டை துண்டுகள் ஜெருசலேமில் உள்ள டேவிட் நகரத்திலும், சிசேரியா மற்றும் அப்பல்லோனியாவிலும் காணப்பட்டன.

இதுகுறித்து ஆய்வாளர் டாக்டர் லீ பெர்ரி கால் கூறும் போது 

இது மிகவும் அரிதான கண்டுபிடிப்பாகும். தென்கிழக்கு ஆசியாவில் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு கோழிகள் வளர்க்கப்பட்டன, ஆனால் அவை மனித உணவில் காலம் கடந்த பிறகே  சேர்க்கப்பட்டது. அவை சேவல் சண்டை போன்ற பிற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன.அவை அழகான விலங்குகளாகக் கருதப்பட்டன, பண்டைய உயிரியல் பூங்காக்களில் காட்சிக்கு வைக்கப்பட்டன, அவை மன்னர்களுக்கு பரிசுகளாக வழங்கப்பட்டன என கூறினார்.

Next Story