குல்பூஷன் ஜாதவ் மேல் முறையீடு செய்ய அனுமதிக்கும் மசோதா பாக்.நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்


குல்பூஷன் ஜாதவ் மேல் முறையீடு செய்ய அனுமதிக்கும் மசோதா பாக்.நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
x
தினத்தந்தி 11 Jun 2021 5:00 PM GMT (Updated: 11 Jun 2021 5:00 PM GMT)

குல்பூஷன் ஜாதவ் மேல் முறையீடு செய்ய அனுமதிக்கும் மசோதா பாக்.நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இஸ்லமாபாத்,

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ். இவர் உளவு பார்த்ததாக கூறி கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். 

இதனையடுத்து குல்பூஷன் ஜாதவிற்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மரண தண்டனை அளிக்க உத்தரவிட்டது.  இதை எதிர்த்து இந்தியா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கடந்த 2019-ல் உத்தரவிட்டது. 

இதையடுத்து, குல்பூஷன் ஜாதவ் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அனுமதிக்கும் வகையில் பாகிஸ்தான் அவசர சட்டம் ஒன்றை கடந்த ஆண்டு நிறைவேற்றியது. இந்த நிலையில்,  இது தொடர்பான மசோதா இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியது.  பாராளுமன்ற கொள்கைகளை அரசு மீறுவதாக குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. 

Next Story