இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு


இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு
x
தினத்தந்தி 11 Jun 2021 5:24 PM GMT (Updated: 11 Jun 2021 5:24 PM GMT)

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8,125- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் முதன் முதலாக கண்டறியப்பட்டதாக கூறப்படும் டெல்டா வகை கொரோனா பரவலால் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. 

டெல்டா வகை கொரோனா 64 சதவீதம் வேகமாக பரவும் தன்மை கொண்டது என எச்சரிக்கப்பட்டுள்ளது.   இங்கிலாந்தில் ஜூன் 21 ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது.  அந்நாட்டில் இன்று ஒரே நாளில் 8, 125- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதிக்குப் பிறகு ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை இதுவேயாகும். இங்கிலாந்தில் தற்போது ஏற்படும் தொற்று பாதிப்பில் 90 சதவீதம் டெல்டா வகை கொரோனாவே என்று அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story