உலக செய்திகள்

பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்தவருக்கு 4 மாதம் சிறை + "||" + Man Who Slapped French President Macron Sentenced to 4 Months in Prison

பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்தவருக்கு 4 மாதம் சிறை

பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்தவருக்கு 4 மாதம் சிறை
பிரான்ஸ் அதிபர் மெக்ரான் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டெய்ன் எல் ஹெர்மிடேஜ் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தை ஆய்வு செய்வதற்காக சென்றிருந்தார்.
அப்போது‌‌ தன்னை வரவேற்க பள்ளிக்கூடத்துக்கு வெளியே காத்திருந்த பொதுமக்களை சந்தித்து கை குலுக்க சென்றபோது, கூட்டத்தில் இருந்த ஒரு நபர் ஒருவர் திடீரென அதிபர் மெக்ரான் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.இதனையடுத்து மெக்ரானை கன்னத்தில் அறைந்த டேமியன் தாரெல், என்கிற வாலிபரையும் இந்த சம்பவத்தை தனது செல்போனில் படம் பிடித்த மற்றொரு நபரையும் போலீசார் கைது செய்தனர். இதனிடையே வாலிபர் தனது கன்னத்தில் அறைந்த விஷயத்தை பெரிதுபடுத்த விரும்பவில்லை என்று கூறிய‌ மெக்ரான் தனிப்பட்ட முறையில் அந்த வாலிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க போவதில்லை என்றும்‌ கூறியிருந்தார். இந்த நிலையில் அதிபர் மெக்ரானை கன்னத்தில் அறைந்தது தொடர்பாக டேமியன் தாரெலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நேற்று முன்தினம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிபரை 
கன்னத்தில் அறைந்ததை ஒப்புக்கொண்ட டேமியன் தாரெல், எல்லோரும் தன்னை கவனிக்க வேண்டும் என்கிற நோக்கில் இதை செய்ததாக கூறினார். அதனைத் தொடர்ந்து அவருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதித்த நீதிபதிகள் அதில் 14 மாதங்களை ரத்து செய்துவிட்டு 4 மாதங்கள் சிறையில் கழிக்க உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு: நீதிமன்ற ஊழியருக்கு 10 ஆண்டு சிறை
காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த நீதிமன்ற ஊழியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த பெற்றோருக்கு தலா 2 ஆண்டுகள் தண்டனையும் விதித்து கடலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
2. தேர்தல் பிரசாரத்துக்கு சரக்கு வாகனங்களில் ஆட்களை அழைத்து வந்தால் உரிமையாளருக்கு 6 மாதம் சிறை
தேர்தல் பிரசாரத்துக்கு சரக்கு வாகனங்களில் ஆட்களை அழைத்து வந்தால் உரிமையாளருக்கு 6 மாதம் சிறை போக்குவரத்து ஆணையர் அறிவிப்பு.
3. போதைப்பொருள் வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகை ராகிணி திவேதி
போதைப்பொருள் வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்து உள்ள நிலையில், நடிகை ராகிணி திவேதி நேற்று இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கண்ணீர்விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.