ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: 12,505 பேருக்கு தொற்று; 396 பேர் உயிரிழப்பு


ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: 12,505 பேருக்கு தொற்று; 396 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 12 Jun 2021 10:10 AM GMT (Updated: 12 Jun 2021 10:10 AM GMT)

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,510 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாஸ்கோ,

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. 

இதுவரை உலக அளவில் 17.52 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 37.77 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 6-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 51,93,964 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா-வைரஸ் தொற்றுக்கு மேலும் 399 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 073 ஆக உயர்ந்துள்ளது.

Next Story