உலக செய்திகள்

அமெரிக்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: ஒரு பெண் பலி; 9 பேர் காயம் + "||" + Mystery figures shoot in US: a woman killed; 9 people were injured

அமெரிக்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: ஒரு பெண் பலி; 9 பேர் காயம்

அமெரிக்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு:  ஒரு பெண் பலி; 9 பேர் காயம்
அமெரிக்காவின் சிகாகோ நகரில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் பலியானார். 9 பேர் காயமடைந்தனர்.
சிகாகோ,

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன.  அந்நாட்டின் தென்கிழக்கில் புளோரிடா மாகாணத்தில் செயல்பட்டு வரும் பல்பொருள் விற்பனை அங்காடிக்குள் கடந்த 2 நாட்களுக்கு முன் புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீரென புகுந்துள்ளார்.  

இதன்பின்னர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்.  இந்த சம்பவத்தில், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.  இந்நிலையில், அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு தெற்கே இன்று காலை சாலையோரம் நின்றிருந்த மக்கள் கூட்டம் மீது திடீரென வந்த 2 மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 29 வயது பெண் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.  இதுதவிர 9 பேர் காயமடைந்தனர்.  அந்த பெண்ணை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  எனினும் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார்.

காயமடைந்த மற்ற 9 பேரும் உள்ளூரில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.  இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் பெட்ரோல் பம்பில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு; 9 பேர் பலி
பாகிஸ்தானில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.
2. அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு; 4 பேர் காயம்
அமெரிக்க பள்ளி கூடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் காயமடைந்து உள்ளனர்.
3. டெல்லி நீதிமன்ற துப்பாக்கி சூடு எதிரொலி; ரவுடி கும்பலை சேர்ந்த 107 பேர் கைது
டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு நடந்த நிலையில் 26 ரவுடி கும்பல்கள் அடையாளம் காணப்பட்டு 107 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
4. ரஷியா பல்கலைக்கழகத்தில் மர்மநபர் துப்பாக்கி சூடு ; 8 பேர் பலி
துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷிய போலீசார் தெரிவித்துள்ளனர்
5. பாகிஸ்தானில் இறுதி ஊர்வலத்தில் துப்பாக்கி சூடு; 8 பேர் பலி
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் இறுதி ஊர்வலத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.