உலக செய்திகள்

சீனாவில் குடியிருப்பு பகுதியில் எரிவாயு குழாய் உடைப்பு ஏற்பட்டு விபத்து - 12 பேர் உயிரிழப்பு + "||" + Gas pipeline explosion in residential area kills 12 in China

சீனாவில் குடியிருப்பு பகுதியில் எரிவாயு குழாய் உடைப்பு ஏற்பட்டு விபத்து - 12 பேர் உயிரிழப்பு

சீனாவில் குடியிருப்பு பகுதியில் எரிவாயு குழாய் உடைப்பு ஏற்பட்டு விபத்து - 12 பேர் உயிரிழப்பு
சீனாவின் ஷியான் நகரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் எரிவாயு குழாயில் உடைப்பு ஏற்பட்டு வெடித்ததால் 12 பேர் உயிரிழந்தனர்.
பெய்ஜிங்,

சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள ஷியான் நகரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று காலை 6.30 மணிக்கு எரிவாயு குழாய் உடைப்பு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் குடியிருப்பு கட்டிடத்தில் பெரும்பகுதி இடிந்தது. இந்த விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.

மேலும் இடிபாடுகளில் சிக்கி 138 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 37 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்களுக்கு செலுத்துவதற்காக ரத்த தானம் செய்ய முன்வருமாறு ஷியான் நகர மருத்துவமனைகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக அங்குள்ள உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. மின்வயர் அறுந்து கியாஸ் குழாயில் விழுந்ததால் ஓட்டலில் தீ விபத்து
மின்வயர் அறுந்து கியாஸ் குழாயில் விழுந்ததால் ஓட்டலில் தீ விபத்து.
2. சீனாவில் படிப்படியாக உயரும் கொரோனா பாதிப்பு; புதிதாக 71 பேருக்கு தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
3. வேகமாக கார் ஓட்டி விபத்து நடிகை யாஷிகா ஆனந்த் கைது ஆவாரா? பலியான தோழி பற்றி உருக்கமான தகவல்
வேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகை யாஷிகா ஆனந்த் சிகிச்சை முடிந்ததும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. பலியான தோழி பற்றியும் உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது.
4. இரு நாடுகளின் மோசமான உறவுக்கு அமெரிக்காவே காரணம்: சீனா குற்றச்சாட்டு
உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான மோதல் நிலவுகிறது. இரு நாடுகளின் உறவும் சுமுகமான நிலையில் இல்லை.
5. சிங்கப்பெருமாள் கோவில் அருகே தனியார் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து
சிங்கப்பெருமாள் கோவில் அருகே தனியார் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.