உலக செய்திகள்

கொரோனா தோற்றம்: இரண்டாம் கட்ட சோதனைக்கு சீனா ஒத்துழைக்க வேண்டும்: உலக சுகாதார அமைப்பு + "||" + WHO chief asks China to cooperate with probe into origins of Covid-19

கொரோனா தோற்றம்: இரண்டாம் கட்ட சோதனைக்கு சீனா ஒத்துழைக்க வேண்டும்: உலக சுகாதார அமைப்பு

கொரோனா தோற்றம்: இரண்டாம் கட்ட சோதனைக்கு சீனா ஒத்துழைக்க வேண்டும்: உலக சுகாதார அமைப்பு
முதற்கட்ட சோதனை முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட சோதனைக்கு சீனா ஒத்துழைக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தலைவர் கோரிக்கை வைத்துள்ளார்.
வாஷிங்டன்,

உலகமெங்கும் சுமார் 17 கோடியே 53 லட்சம் பேரை பாதித்து, 38 லட்சம் பேரின் இன்னுயிர்களைப் பறித்து, இன்றும் மனித குலத்தை கதிகலங்க வைத்து வருவது கொரோனா வைரஸ்.

2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் இந்த வைரஸ் முதலில் தோன்றியது. குறிப்பாக அங்குள்ள மாமிச உணவுச்சந்தையில் இருந்து கொரோனா பரவியதாக சொல்லப்பட்டது. பின்னர் உகான் நகர ஆய்வுக்கூடத்தில் (வைராலஜி நிறுவனம்) இருந்து கசிய விடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உலகை அதிர வைத்தது.

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரசின் பிறப்பிடம் எது என்பது தொடர்பாக அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்புத் தலைவர் டெட்ராஸ் அதனோம் கெப்ரியேசஸ்,  முதற்கட்ட வைரஸ் பரவல் குறித்த சோதனை முடிந்துவிட்ட நிலையில் உகான் நகரில் இரண்டாம் கட்ட சோதனை நடைபெற உள்ளது என்றும் இதற்கு சீன கம்யூனிச அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கோவிட் -19 இன் தோற்றம் குறித்து தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணைக்கு ஒத்துழைக்க சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம்- உலக சுகாதார அமைப்பு அடுத்தவாரம் இறுதி முடிவு
வசரகால பயன்பாட்டுக்கு கோவேக்சினை பயன்படுத்த அனுமதி கோரி பாரத் பயோடெக் உலக சுகாதார அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது.
2. காற்று மாசுபாடு தரத்தை புதுப்பித்துள்ளது உலக சுகாதார அமைப்பு
உலக சுகாதார அமைப்பானது காற்று மாசு குறித்த வழிகாட்டுதல்களை 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதுப்பித்துள்ளது. இந்த புதிய வரம்புகளை உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்று பரிந்துரைத்துள்ளது.
3. தென் கிழக்கு ஆசியாவில் கொரோனா பாதிப்பு சரிவு- உலக சுகாதார அமைப்பு அறிக்கை
கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பான வாராந்திர அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
4. மேற்கு ஆப்பிரிக்காவில் புதிய கொடிய வைரஸ்; உலக சுகாதார அமைப்பு பகீர் தகவல்
வெளவால்களிலிருந்து பரவும் மார்பர்க் வைரஸ் நோய் 88 சதவிகித இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
5. கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்குமா? உலக சுகாதார அமைப்பு பரிசீலனை
பாரத் பயோடெக் நிறுவனம், உலக சுகாதார அமைப்பிடம் பல்வேறு தரவுகளுடன் விண்ணப்பித்துள்ளது.