உலக செய்திகள்

வியட்நாமில் பைசர் தடுப்பூசிக்கு அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் + "||" + Vietnam Ministry of Health approves Pfizer vaccine

வியட்நாமில் பைசர் தடுப்பூசிக்கு அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல்

வியட்நாமில் பைசர் தடுப்பூசிக்கு அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல்
வியட்நாமில் பைசர் தடுப்பூசியை அவசரத் தேவைக்குப் பயன்படுத்த அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
வியட்நாம்,

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின், உலக நாடுகள் முழுவதும் பரவியது. தற்போது, உலகம் முழுதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16. கோடியை தாண்டியுள்ளது.

இதனிடையே இந்த கொடிய வைரசை ஒழிப்பதற்கு தடுப்பூசி ஒன்று மட்டுமே தீர்வு என்பதை உணர்ந்த உலக நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் முழுவீச்சில் இறங்கின. தற்போது உலக ஆராய்ச்சியாளர்கள் போராடி, கொரோனாவுக்கெதிரான தடுப்பூசிகளை கண்டறிந்துள்ளனர். இதன்படி ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, அமெரிக்காவின் மாடர்னா, இந்தியாவின் கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட பல தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், வியட்நாமில் ஏற்கனவே சீனாவின் சினோபார்ம், ரஷியாவின் ஸ்புட்னிக் மற்றும் இங்கிலாந்தின் ஆஸ்ட்ரா ஜெனகா ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியை அவசரத் தேவைக்குப் பயன்படுத்த அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வியட்நாமிற்கு 20 லட்சம் ‘மாடர்னா’ தடுப்பூசிகளை அனுப்பி வைத்தது அமெரிக்கா
‘கோவேக்ஸ்’ திட்டத்தின் கீழ் வியட்நாமிற்கு அமெரிக்க அரசு 20 லட்சம் ‘மாடர்னா’ தடுப்பூசிகளை அனுப்பி வைத்துள்ளது.
2. சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி: அடுத்தவாரம் மந்திரி சபை ஒப்புதல் வழங்கும் - பிரதமர் ஜெசிந்தா நம்பிக்கை
நியூசிலாந்தில் சிறுவர்களுக்கான பைசர் கொரோனா தடுப்பூசிக்கு, அடுத்தவாரம் மந்திரி சபை ஒப்புதல் வழங்கும் என்று அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
3. வியட்நாமில் பரவும் கொரோனா கலவையான திரிபு அல்ல : உலக சுகாதார அமைப்பு
இந்தியாவில் பரவிய கொரோனா வகையும், பிரிட்டனில் பரவிய வகையும் கலந்த ஒரு புதிய கொரோனா திரிபு வியட்நாமில் பரவியதாக கூறப்பட்டது.
4. வியட்நாமில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு
வியட்நாம் நாட்டில் புதிய வகையான உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
5. வெளிநாட்டு நிறுவனங்களிடம் தடுப்பூசிகளை கொள்முதல் செய்யுங்கள் மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கோரிக்கை
வெளிநாட்டு நிறுவனங்கள் மாநில அரசுகளுக்கு நேரடியாக தடுப்பூசியை விநியோகிக்க மறுப்பு தெரிவிப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.