உலக செய்திகள்

நைஜீரியாவில் கிராமங்களுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் + "||" + Gunmen attack villages, kill over 90 in Nigeria

நைஜீரியாவில் கிராமங்களுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்

நைஜீரியாவில் கிராமங்களுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இவர்கள் போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.இதுதவிர போகோ ஹராம் பயங்கரவாதிகளால் நாட்டில் நிலவும் அசாதாரண சூழலை பயன்படுத்தி பல்வேறு ஆயுத குழுக்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளன.குறிப்பாக நாட்டின் வடமேற்கு பகுதியில் பல ஆயுத குழுக்கள் கொலை, கொள்ளை மற்றும் கடத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில் வடமேற்கு மாகாணம் ஷாம்பாராவின் சுர்மி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்துக்குள் நேற்று முன்தினம் இரவு நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் புகுந்தனர். பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்திறங்கிய பயங்கரவாதிகள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவதுபோல் சுட்டுத் தள்ளினர். பின்னர் அந்த கிராமத்தில் இருந்த கால்நடை பண்ணை மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்த கால்நடைகளை கடத்தி சென்றனர்.

அதுமட்டுமின்றி செல்லும் வழியில் இதேபோல் 5 கிராமங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகளின் இந்தக் கொடூரத் தாக்குதல்களில் 53 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் பதிலடி தாக்குதல்; ஜெய்ஷ்-இ- முகமது தளபதி சுட்டுக்கொலை
காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
2. பயங்கரவாதிகளுடன் தொடர்பு: ஜம்மு காஷ்மீரில் அரசு ஊழியர்கள் 11 பேர் பணி நீக்கம்
பல்வேறு துறைகளில் பணியாற்றிய 11 பேருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டதையடுத்து பணி நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
3. ஆயுத ‘சப்ளை’க்கு எந்தெந்த வகையில் டிரோன்களை பயங்கரவாதிகள் பயன்படுத்தினார்கள்? அதிர்ச்சி தகவல்
கடந்த 2 ஆண்டுகளில் ஆயுத சப்ளைக்கு எந்தெந்த வகையில் டிரோன்களை பயங்கரவாதிகள் பயன்படுத்தினார்கள்? என்பது பற்றி அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
4. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு- சிறப்பு போலீஸ் அதிகாரி, மனைவி உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு போலீஸ் அதிகாரியின் இல்லத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
5. காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை
காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.