உலக செய்திகள்

‘ஜி-7’ உச்சி மாநாட்டில் ஒரே பூமி, ஒரே சுகாதார அணுகுமுறைக்கு மோடி அழைப்பு + "||" + G7 summit: Modi calls for adopting ‘one earth, one health’ approach to deal with coronavirus

‘ஜி-7’ உச்சி மாநாட்டில் ஒரே பூமி, ஒரே சுகாதார அணுகுமுறைக்கு மோடி அழைப்பு

‘ஜி-7’ உச்சி மாநாட்டில் ஒரே பூமி, ஒரே சுகாதார அணுகுமுறைக்கு மோடி அழைப்பு
‘ஜி-7’ உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ஒரே பூமி, ஒரே சுகாதாரம் என்ற அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்தார்.
மோடி பேச்சு
இங்கிலாந்தில் கார்ன்வாலில் உள்ள கார்பிஸ் பே கடலோர பகுதியில் நடந்த ‘ஜி-7’ உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் சிறப்பு அழைப்பாளராக காணொலி காட்சி வழியாக கலந்து கொண்டார். ‘ஆரோக்கியம் - மீண்டும் வலுவாக உருவாக்குதல்’ என்ற தலைப்பில் நடந்த அமர்வில் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றை திறம்பட கையாள்வதற்கு ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற அணுகுமுறை வேண்டும். கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கான காப்புரிமை தற்காலிக விலக்கலுக்கு ‘ஜி-7’ அமைப்பின் 
தலைவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

எதிர்கால தொற்றுநோய்கள்
எதிர்காலத்தில் வரக்கூடிய தொற்றுநோய்களைத் தடுப்பதற்கு உலகளாவிய ஒற்றுமை, தலைமைத்துவம் வேண்டும். இந்த சவாலை சமாளிப்பதற்கு ஜனநாயக மற்றும் வெளிப்படையான சமூகங்களின் பொறுப்பை வலியுறுத்த விரும்புகிறேன். இந்தியாவைப் பொறுத்தமட்டில் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து ஒட்டுமொத்த சமூகமாக செயல்படுகிறோம். அரசாங்கம், தொழில் துறை மற்றும் சிவில் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் தொற்றுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுகிறோம்.

ஒரே பூமி, ஒரே சுகாதாரம்
கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான தொழில் நுட்பங்களில் காப்புரிமை விலக்குக்காக உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் ஒரு முன்மொழிவை அளித்துள்ளன. இதற்கு ஜி-7 நாடுகள் ஆதரவு தர வேண்டும்.உலகளாவிய சுகாதார நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவு உண்டு. இன்றைய கூட்டம், ஒட்டுமொத்த உலகுக்கும் ஒரே பூமி, ஒரே சுகாதாரம் என்ற செய்தியை விடுக்க வேண்டும். கொரோனா தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் ஜி-7 நாடுகள் மற்றும் பிற உலக நாடுகள் அளித்த ஆதரவு பாராட்டுக்குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. உளவு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமையிலான விசாரணையை தொடங்க வேண்டும் - மம்தா பானர்ஜி
பெகாசஸ் விவகாரத்தில் பிரதமர் மோடி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
2. 5 நாள் பயணமாக டெல்லி சென்றார் மம்தா பானர்ஜி; மோடி, எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்கிறார்
மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 5 நாள் பயணமாக நேற்று டெல்லி சென்றார். பிரதமர் மோடி, எதிர்க்கட்சித்தலைவர்களை அவர் சந்தித்து பேசுகிறார்.
3. ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்’ - கோவின் இணையதளம் குறித்து பிரதமர் மோடி உரை
‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்’ என்று கோவின் இணையதளம் குறித்து சர்வதேச கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
4. மோடிக்கு பாராட்டு தெரிவித்து, ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
கொரோனா பாதிப்பை சீர் செய்ய ரூ.6.29 லட்சம் கோடி சலுகைகள் மத்திய அரசு அறிவித்ததற்கு பாராட்டு தெரிவித்து மோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
5. நரசிம்மராவ் 100-வது பிறந்தநாள்: மோடி புகழாரம்
முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவின் 100-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.