உலக செய்திகள்

ராணுவ ஆட்சி நடந்து வரும் மியான்மரில் 1.45 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Corona affects 1.45 lakh people in Myanmar

ராணுவ ஆட்சி நடந்து வரும் மியான்மரில் 1.45 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

ராணுவ ஆட்சி நடந்து வரும் மியான்மரில் 1.45 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
ராணுவ ஆட்சி நடந்து வரும் மியான்மர் நாட்டில் 1,45,603 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.


யாங்கன்,

ஆசிய நாடுகளில் ஒன்றான மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு மே 23ந்தேதி முதன்முறையாக 2 பேருக்கு கொரோனா பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது.  இதன்பின்னர் தொற்று எண்ணிக்கை சீராக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், நேற்றுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் 373 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தன.  இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்து 603 ஆக உயர்வடைந்து உள்ளது.  3 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதனால் மொத்த உயிரிழப்பு 3,244 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு சுகாதார மற்றும் விளையாட்டு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.  இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 928 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.

அந்நாட்டில், கடந்த சில மாதங்களாக அரசாட்சியை ராணுவம் கைப்பற்றி ஆட்சி செய்து வருகிறது.  இந்நிலையில், கடந்த மே மாத இறுதியில் நாள் ஒன்றுக்கு பதிவான பாதிப்பு எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது.

இதனால், மியான்மரில் கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசு இறங்கியது.  இதனை தொடர்ந்து அந்நாட்டின் சில நகரங்களில் ஊரடங்கு உத்தரவை அமைச்சகம் பிறப்பித்து உள்ளது.  இதன்படி, பொதுமக்கள் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு திடீர் அதிகரிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. புதிதாக 42 பேருக்கு தொற்று உறுதியானது.
2. டெல்லி, மராட்டியம் மாநில கொரோனா பாதிப்பு விவரம்
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,126-பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
தமிழகத்தில் இன்று 1,949- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. விருதுநகர்-ராமநாதபுரம் மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களில் தரிசனத்திற்கு பக்தர்களுக்கு தடை
விருதுநகர்-ராமநாதபுரம் மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களில் ஆகஸ்ட் 12 வரை தரிசனத்திற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
5. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 138-பேர் உயிரிழப்பு
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 21,961-பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.