கொரோனாவுக்கு எதிராக மேலும் ஒரு தடுப்பூசி; 90.4 சதவீத செயல்திறன் என அறிவிப்பு


கொரோனாவுக்கு எதிராக மேலும் ஒரு தடுப்பூசி; 90.4 சதவீத செயல்திறன் என அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Jun 2021 1:59 PM GMT (Updated: 14 Jun 2021 1:59 PM GMT)

கொரோனா தொற்றுக்கு எதிராக நோவாவேக்ஸ் நிறுவனத்தின் தடுப்பூசி களமிறங்குகிறது.

வாஷிங்டன்,

உலகம் முழுவதும் 17,59,54,708 பேர் தற்போது வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் பரவலை கட்டிப்படுத்தும் பேராயுதமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  நோவாவேக்ஸ் என்ற நிறுவனம் கொரோனா தொற்றுக்கு எதிராக கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் சுமார் 29,960 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டதில் மிதமான, கடுமையான நோயில் இருந்து 100 சதவீதம் பாதுகாக்கும் என்றும், 90.4 சதவீத செயல்திறன் கொண்டது என்றும், உருமாற்றம் அடைந்த கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் தடுப்பூசிக்கான தேவை பலமடங்கு குறைந்துள்ளது. ஆனால் பல நாடுகளில் அதற்கு கிராக்கி உள்ளது. எனவே, அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு துறையின் அனுமதி கிடைத்தவுடன்,வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தடுப்பூசியை இருப்பு வைப்பதும் எடுத்து செல்வதும் சுலபம் எனவும் நோவாவேக்ஸ் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் சீரம் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் என கூறப்படுகிறது.

2021-ம் ஆண்டின் மூன்றாலம் காலாண்டில் அனுமதி பெற்று விடுவோம் என்றும், காலாண்டு இறுதியில் மாதத்திற்கு 10 கோடி டோஸ்களும், ஆண்டு இறுதி காலண்டிற்குள் மாதத்திற்கு 15 கோடி டோஸ்கள் தயாரிக்க முடியும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நோவாவேக்ஸ் தடுப்பூசியை தயாரிக்கும் உரிமையை பெறும் எனத் தெரிகிறது.

Next Story