அமீரகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,837 ஆக குறைந்தது


அமீரகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,837 ஆக குறைந்தது
x
தினத்தந்தி 14 Jun 2021 7:53 PM GMT (Updated: 14 Jun 2021 7:53 PM GMT)

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று ஒருநாளில் மேற்கொள்ளப்பட்ட 2 லட்சத்து 37 ஆயிரத்து 439 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 1,837 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 99 ஆயிரத்து 823 ஆக உயர்ந்தது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று மட்டும் 1,811 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 79 ஆயிரத்து 45 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 1,730 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 19 ஆயிரத்து 48 பேர் கொரோனா பாதிப்பின் காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கடந்த சில நாட்களாக 2 ஆயிரத்துக்கும் மேல் ஒருநாள் கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், தொடர்ந்து 2 நாட்களாக இந்த எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story