உலக செய்திகள்

2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டால், டெல்டா வைரசில் இருந்து பாதுகாப்பு -விஞ்ஞானிகள் தகவல் + "||" + Two doses of vaccine highly effective against Delta variant, U.K. officials say

2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டால், டெல்டா வைரசில் இருந்து பாதுகாப்பு -விஞ்ஞானிகள் தகவல்

2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டால், டெல்டா வைரசில்  இருந்து பாதுகாப்பு -விஞ்ஞானிகள் தகவல்
2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டால், டெல்டா வைரசில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் என இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
புதுடெல்லி, 

மனிதகுலத்தை மிரட்டிவரும் கொரோனா வைரஸ், புதிது புதிதாகவும் உருவெடுத்து குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அந்த வரிசையில், அதிகமாக பரவும் தன்மையுள்ள டெல்டா வகை சார்ந்த ‘சார்ஸ்-கொரோனா வைரஸ் 2’ மேலும் உருமாறி, ‘டெல்டா பிளஸ்’ ஆக மாறியுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

ஆனால் ஆறுதல் அளிக்கும் வகையில் இந்த வகை, இந்தியாவில் தற்போது குறைவாகவே காணப்படுவதால் உடனடி கவலைக்கு அவசியம் இல்லை என்றும் கூறுகின்றனர். முதன் முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட, மிக மோசமான 2-வது அலைக்கு முக்கிய காரணமான டெல்டா வகை கொரோனா வைரஸ்தான் மேலும் உருமாறி புதிய டெல்டா பிளஸ் வகையாக தோன்றியுள்ளது.

தற்போதைய புதிய மாற்றம், சார்ஸ்-கொரோனா வைரஸ் 2-ன் கூர்முனை புரதத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், அது மனித செல்களில் நுழையவும், பாதிப்பை ஏற்படுத்தவும் இந்த புதுவகை வைரசுக்கு உதவுவதாகவும் டெல்லியில் உள்ள மரபியல் மற்றும் ஒருங்கிணை உயிரியல் நிறுவன விஞ்ஞானி வினோத் ஸ்காரியா கூறுகிறார்.

இப்போதைக்கு புதிதாக மாற்றம் அடைந்துள்ள கொரோனா வகை குறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை என்றாலும், அதைத்தொடர்ந்து கண்காணித்து வருவது அவசியம் என்பதே விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ள

பைசர் தடுப்பூசி போட்டுக் கொண்டால், மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டிய நிலையை 96 சதவீதம் நோயாளிகளுக்கு தடுத்து விடுவதாகவும், அஸ்ட்ராஜெனேக்கா தடுப்பூசி போட்டுக் கொண்டால், மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டிய நிலையை 92 சதவீதம் நோயாளிகளுக்கு தடுத்து விடுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரஸ், இங்கிலாந்தில் அதிகமாக பரவி வரும் நிலையில், இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

1. ரிஸ்க் நாடுகளில் இருந்து வந்த 6 பேருக்கு கொரோனா: ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா என சோதனை
11 சர்வதேச விமானங்களில் இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களுக்கு வந்த 3,476 பயணிகளிடம் நடத்தப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.
2. கேரளாவில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட இன்று சற்று குறைந்தது
தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 44,638- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
3. புதிய வகை கொரோனா வைரஸ்: மத்திய அரசு என்ன செய்ய போகிறது..? - சுப்ரீம்கோர்ட்டு கேள்வி
புதிய வகை ‘ஒமிக்ரான்’ கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய அரசு என்ன செய்ய போகிறது என்று சுப்ரீம்கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
4. ’ஒமிக்ரான்’ வகை கொரோனா அச்சுறுத்தல்: எல்லைகளை மூடுகிறது இஸ்ரேல்
ஒமிக்ரான் வகை கொரோன அச்சுறுத்தல் காரணமாக நள்ளிரவு முதல் வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு இஸ்ரேல் தடை விதிக்க முடிவு செய்துள்ளது.
5. கர்நாடகாவில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று
நவம்பர் 1 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து 94 பேர் வருகை தந்துள்ளனர்.