இங்கிலாந்தில் மேலும் 7,673- பேருக்கு கொரோனா தொற்று


இங்கிலாந்தில் மேலும் 7,673- பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 15 Jun 2021 7:24 PM GMT (Updated: 15 Jun 2021 7:24 PM GMT)

டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் வேகமாகப் பரவிவருகிறது.

லண்டன்,

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்க் கொல்லியான கொரோனா வைரஸ் ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு சில நாடுகள் மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு வந்துள்ள நிலையில் பல நாடுகளில் கொரோனா வைரசின் புதிய, புதிய அலைகள் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.  அந்த வகையில்,  இங்கிலாந்தில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. 

குறிப்பாக, இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ் அங்கு வேகமாகப் பரவிவருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை இருந்து வருகிறது. 

இந்த நிலையில், இங்கிலாந்தில் மேலும் 7,673- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 45,81,006- ஆக உள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 10- பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,27,917- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,60,907- ஆக இருக்கிறது.


Next Story