உலக செய்திகள்

அமீரகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை கடந்தது + "||" + The total corona impact in the UAE has exceeded 6 Lacks

அமீரகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை கடந்தது

அமீரகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை கடந்தது
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று ஒருநாளில் மேற்கொள்ளப்பட்ட 2 லட்சத்து 29 ஆயிரத்து 143 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து 127 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து ஆயிரத்து 950 ஆக உயர்ந்தது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 94 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 81 ஆயிரத்து 139 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 1,734 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 19 ஆயிரத்து 77 பேர் கொரோனா பாதிப்பின் காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 2 நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் கீழ் இருந்தநிலையில், நேற்று இந்த எண்ணிக்கை மீண்டும் 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. 3 முதல் 17 வயதுடையவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி போட அனுமதி: அமீரக சுகாதார அமைச்சகம்
900 சிறுவர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையையடுத்து, அமீரகத்தில் 3 வயது முதல் 17 வயதுடைய சிறுவர், சிறுமியருக்கு சினோபார்ம் தடுப்பூசியை போட்டுக்கொள்ள சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
2. உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 18 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.95 கோடியாக உயர்ந்துள்ளது.
3. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.89 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17.95 கோடியை தாண்டியது.
4. சீனாவில் புதிதாக 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.85 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17.92 கோடியை தாண்டியது.