தினசரி கொரோனா பாதிப்பு: உலக அளவில் பிரேசில் முதலிடம்


தினசரி கொரோனா பாதிப்பு:  உலக அளவில் பிரேசில் முதலிடம்
x
தினத்தந்தி 15 Jun 2021 11:37 PM GMT (Updated: 15 Jun 2021 11:37 PM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 62 ஆயிரமாக உள்ளது.

பிரசிலியா, 


சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்  உலக முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொற்று பரவி ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் ஆகியுள்ள பாதிலும் கொரோனாவின் கோர தாண்டவம் கட்டுக்குள் வந்தபாடில்லை. உருமாற்றம் அடைந்து அடுத்தடுத்து அலைகளாக வந்து வைரஸ் இன்னமும் பல நாடுகளில் வீரியத்துடன் பரவி வருகிறது. 

மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் போடும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால், நம்பிக்கை அளிக்கும் வகையில் தொற்று பரவல் சற்று தணிந்து வருகிறது.  எனினும் முழுமையாக கட்டுக்குள் வந்தபாடில்லை. 

இந்த நிலையில், தினசரி கொரோனா பாதிப்பில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி பிரேசில் முதலிடம் வகிக்கிறது. வோர்ல்டோமீட்டர்ஸ் தரவுகளின் படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 62 ஆயிரமாக உள்ளது. பிரேசிலில் 78 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக அர்ஜெண்டினாவில் 27 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story