உலக செய்திகள்

பாரிசில் நடைபெறும் ‘விவாடெக்’ டிஜிட்டல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரை + "||" + PM Modi to deliver keynote address at 5th edition of VivaTech today

பாரிசில் நடைபெறும் ‘விவாடெக்’ டிஜிட்டல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரை

பாரிசில் நடைபெறும் ‘விவாடெக்’ டிஜிட்டல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரை
விவாடெக் என்பது 2016-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பாரிஸ் நகரத்தில் நடைபெறும் ஐரோப்பாவின் பிரமாண்ட டிஜிட்டல் மற்றும் புதுமை நிறுவனங்களின் நிகழ்ச்சியாகும்.
புதுடெல்லி,

பாரிஸில் நடைபெறும் பிரமாண்ட டிஜிட்டல் நிகழ்ச்சியான விவாடெக்கின் 5-வது  நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்வில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார்.

விவாடெக் என்பது 2016-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பாரிஸ் நகரத்தில் நடைபெறும் ஐரோப்பாவின் பிரமாண்ட டிஜிட்டல் மற்றும் புதுமை நிறுவனங்களின் நிகழ்ச்சியாகும். 

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஸ்பெயின் பிரதமர் திரு பெட்ரோ சான்சே, பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக அதிகாரியுமான டிம் குக், பேஸ்புக் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜுகர்பெர்க், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அதிபர் பிராட் ஸ்மித் போன்ற பெரு நிறுவனங்களின் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் அவமதிக்கின்றன - மோடி குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் அவமதிப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
2. பிரதமர் மோடியுடன் கர்நாடக முதல் மந்திரி சந்திப்பு
கர்நாடகத்தின் புதிய முதல் மந்திரி பசவராஜ் பொம்மை இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
3. உலக அளவில் டுவிட்டரில் அதிக பின் தொடர்பவர்கள் கொண்டவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி
உலக அளவில் அதிக டுவிட்டர் பின் தொடர்பவர்களை கொண்டவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி 11வது இடத்தில் உள்ளார்.
4. தோலாவிராவை உலகப் பாரம்பரிய இடமாக யுனெஸ்கோ அறிவிப்பு ;பிரதமர் மோடி மகிழ்ச்சி
மாணவப் பருவத்தில், நான் முதன்முதலாக தோலாவிரா சென்றுள்ளேன். அந்த இடம் என் மனதைக் கவா்ந்தது என பிரதமர் மோடி கூறி உள்ளார்.
5. புதிய கல்விக் கொள்கை உருவாக்கி ஓராண்டு நிறைவு: பிரதமர் மோடி நாளை உரை
புதிய கல்விக் கொள்கை உருவாக்கி ஓராண்டு நிறைவு பெற உள்ள பிரதமர் மோடி நாளை உரையாற்ற உள்ளார்.