உலக செய்திகள்

ஸ்பெயினில் தாயை கொன்று, உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட வாலிபருக்கு 15 ஆண்டு சிறை + "||" + Spanish man jailed for killing and eating his mother

ஸ்பெயினில் தாயை கொன்று, உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட வாலிபருக்கு 15 ஆண்டு சிறை

ஸ்பெயினில் தாயை கொன்று, உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட வாலிபருக்கு 15 ஆண்டு சிறை
ஸ்பெயினில் தாயை கொன்று, உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட ஆல்பர்ட்டோவுக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்பர்ட்டோ சான்ஸ் கோமஸ் ( வயது 28). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 60 வயதான தனது தாயுடன் ஏற்பட்ட தகராறின் போது, பெற்ற தாய் என்றும் பாராமல் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அவர் தனது தாயின் உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் டப்பாக்களில் போட்டு வைத்தார். 2 வாரங்களுக்குப் பிறகு அந்த உடல் பாகங்களில் சிலவற்றை அவர் சமைத்து சாப்பிட்டார். மேலும் தனது நாய்க்கும் அதனை உணவாக அளித்தார். இதனிடையே கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆல்பர்ட்டோவின் தாயின் நெருங்கிய தோழி ஒருவர் தனது தோழியை நீண்ட நாட்களாக காணவில்லை என போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் ஆல்பர்ட்டோவின் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பிளாஸ்டிக் டப்பாக்களில் பெண்ணின் உடல் பாகங்கள் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ந்து போயினர். இதையடுத்து அவர்கள் ஆல்பர்ட்டோவை பிடித்து விசாரித்தபோது உண்மை தெரியவந்தது. அதனைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று மாட்ரிட் கோர்ட்டில் நடந்தது. விசாரணையின்போது ஆல்பர்ட்டோ, கொலை நடந்த சமயத்தில் தான் மன நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறினார். அதனை ஏற்க மறுத்த 
நீதிபதி ஆல்பர்ட்டோவுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. கல்வான் மோதல்: சீன வீரர்கள் அதிக அளவில் பலி என பதிவிட்ட சீனருக்கு 8 மாத சிறை தண்டனை
கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் சீன வீரர்கள் அதிக அளவில் பலி என பதிவிட்ட பிரபல சீன பிளாக்கர் 8 மாத சிறை தண்டனை பெற்றுள்ளார்.
2. கொரோனா பெண் பணியாளர்களை தாக்கினால் 5 ஆண்டு சிறை தண்டனை: கர்நாடக அரசு அதிரடி
கொரோனா பணியில் உள்ள பெண் பணியாளர்களை தாக்கினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என கர்நாடக அரசு அதிரடியாக அறிவித்து உள்ளது.
3. உக்ரைனில் அதிபர் அலுவலகம் அருகே மோதல்; காவல் அதிகாரிகள் 27 பேர் காயம்
உக்ரைன் நாட்டில் அதிபர் அலுவலகம் அருகே நடந்த மோதலில் காவல் அதிகாரிகள் 27 பேர் காயமடைந்தனர்.
4. ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நவால்னிக்கு சிறை தண்டனை; உலக நாடுகள் கண்டனம்
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நவால்னிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.