சீனாவின் ஆதிக்கத்துக்கு மாற்றாக ரஷியாவை அமெரிக்க ஆதரிக்கிறதா...?


சீனாவின் ஆதிக்கத்துக்கு மாற்றாக ரஷியாவை அமெரிக்க ஆதரிக்கிறதா...?
x
தினத்தந்தி 17 Jun 2021 7:45 AM GMT (Updated: 17 Jun 2021 7:45 AM GMT)

சீனாவின் ஆதிக்கத்துக்கு மாற்றாக ரஷியாவை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ஆதரிப்பதாக வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

வாஷிங்டன்

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அவரது அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பிடன் ஆகியோர் நேற்று  சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் சந்தித்து பேசினர் . சந்திப்பிற்கு பிறகு, புதின் தனது பத்திரிகையாளர் சந்திப்பில் பிடனுடனான சந்திப்பு "ஆக்கபூர்வமானது" என்றும், இரு நாடுகளும் தங்கள் தூதர்கள் மாஸ்கோ மற்றும் வாஷிங்டனில் உள்ள தூதரகங்களூக்கு திரும்புவதாக ஒப்புக் கொண்டதாகவும் கூறினார்.

மூலோபாய ஸ்திரத்தன்மை, வர்த்தக உறவுகள், பிராந்திய பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பு உள்ளிட்ட பல தலைப்புகளில் இரு நாடுகளும் விவாதித்தன என்றும் புதின் கூறினார்.

பனிப்போருக்குப் பிறகு  அமெரிக்க-ரஷியா மோசமானஉறவைத் தடுக்கும் விருப்பம் இரு தரப்பினருக்கும் உள்ளது என்பதை இந்த சந்திப்பு தெளிவாகக் காட்டுகிறது.

எவ்வாறாயினும், உக்ரைன், சிரியா, பெலாரஸ் மற்றும் மனித உரிமைகள் போன்ற பிரச்சினைகளில் அமெரிக்காவும் ரஷியாவும் அடிப்படை வேறுபாடுகளைக் கொண்டுள்ளன, அவைகள் ஒரே ஒரு சந்திப்பில் தீர்க்கப்பட முடியாது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகள் டொனால்ட் டிரம்ப் மற்றும் பராக் ஒபாமா ஆகியோர் பதிவி ஏற்றபோது  நுழைந்தபோது, அவர்கள் இருவரும் அமெரிக்க-ரஷ்யா உறவுகளை மீண்டும் தொடங்க பொது விருப்பத்தைக் வெளிக்காட்டினர். ஆனால்  இருதரப்பு உறவுகள் மோசமடைந்தன.

அமெரிக்கத் தேர்தலில் தலையீடு, மேலை நாடுகளுக்கு எதிரான இணைய விரும்புவதாக கூறப்படுகிறது.

அணு ஆயுதப் போட்டி உள்ளிட்ட பதற்றங்களைத் தணிக்க பிடன் விரும்புவதாகவும், புதின் அவ்வாறு எண்ணுகிறாரா என்பது தெரியவில்லை என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

சீனாவின் ஆதிக்கத்துக்கு மாற்றாக ரஷியாவை அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பிடன் ஆதரிப்பதாக வல்லுநர்கள் கருத்து  தெரிவிக்கின்றனர் 

அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பிடன் ரஷியாவை நேரடிப் போட்டியாளராகக் கருதவில்லை என்றும், சீன வணிக ஆதிக்கம் மேலோங்கி வரும் நிலையில், அதற்கு மாறாக ரஷியாவை ஆதரிக்கும்படி நட்பு நாடுகளைத் தூண்டுவதாகவும் அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Next Story