உலக செய்திகள்

‘ரஷியாவுடனான உச்சி மாநாட்டில் அமெரிக்காவுக்கு எதுவும் கிடைக்கவில்லை': டிரம்ப் விமர்சனம் + "||" + Former president Trump says US got nothing from Summit with Russia

‘ரஷியாவுடனான உச்சி மாநாட்டில் அமெரிக்காவுக்கு எதுவும் கிடைக்கவில்லை': டிரம்ப் விமர்சனம்

‘ரஷியாவுடனான உச்சி மாநாட்டில் அமெரிக்காவுக்கு எதுவும் கிடைக்கவில்லை': டிரம்ப் விமர்சனம்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் நேற்று முன்தினம் அமெரிக்கா மற்றும் ரஷியா இடையிலான உச்சி மாநாடு நடந்தது.
இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ரஷிய அதிபர் புதின் ஆகிய இருவரும் கலந்து கொண்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை இணக்கமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அமைந்ததாக இருநாட்டு தலைவர்களும் தெரிவித்தனர். இந்த நிலையில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், ரஷியாவுடனான உச்சி மாநாட்டில் அமெரிக்காவுக்கு எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது இதுகுறித்து அவர் கூறுகையில்,“ நமக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு பெரிய கட்டத்தையும் நாம் ரஷியாவுக்கு கொடுத்தோம். ஆனாலும் நமக்கு எதுவும் கிடைக்கவில்லை. நம்பமுடியாத மதிப்புமிக்க ஒன்றை நாம் விட்டுவிட்டோம். ‌ரஷியாவுக்கு நாம் பல சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளோம். அதற்கு பிரதிபலனாக நமக்கு எதுவும் கிடைக்கவில்லை” என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; புளோரிடாவில் ஒரே நாளில் 22 ஆயிரம் பேருக்கு தொற்று
அமெரிக்காவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. புளோரிடா மாகாணத்தில் ஒரே நாளில் 22 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகி உள்ளது.
2. தடுப்பூசி போட்டுக்கொண்டால் பாதுகாப்பு; பெரியம்மை போல டெல்டா வைரஸ் எளிதாக பரவும்: அமெரிக்கா அறிக்கை
பெரியம்மை போல டெல்டா வைரஸ் எளிதாக பரவும், கடுமையாக பாதிக்கும்; தடுப்பூசி போட்டுக்கொண்டால் பாதுகாப்பு என்று அமெரிக்க அறிக்கை ஒன்று கூறுகிறது.
3. கொரோனா காலத்தில் அமெரிக்கா பெரும் பாதிப்புகளை சந்தித்தபோது இந்தியா உதவியது: ஆண்டனி பிளிங்கன்
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக இந்தியா மற்றும் அமெரிக்கா திகழ்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
4. ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் இறுதிப்போட்டியில் இருந்து நடப்பு சாம்பியன் திடீர் விலகல்
தனது மன ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இறுதிப்போட்டியில் இருந்து விலகியதாக அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ் தெரிவித்துள்ளார்.
5. ஈராக்கில் அமெரிக்காவின் போர் நடவடிக்கை இந்த ஆண்டு இறுதியில் நிறைவு: ஜனாதிபதி ஜோ பைடன்
ஐ.எஸ். பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிடுவதற்காக அமெரிக்கா கடந்த 2014-ம் ஆண்டு ஈராக் நாட்டுக்கு தனது படைகளை அனுப்பியது. அமெரிக்க படைகளின் உதவியுடன் ஈராக் ராணுவம் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுக்குள் கொண்டுவந்தது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு‌ ஈராக் அறிவித்தது.