உலக செய்திகள்

இந்தியாவில் இருந்து துபாய்க்கு 20 ஆயிரம் மெட்ரிக் டன் வாழைப்பழம் இறக்குமதி + "||" + India starts exporting GI-certified Jalgaon banana to Dubai

இந்தியாவில் இருந்து துபாய்க்கு 20 ஆயிரம் மெட்ரிக் டன் வாழைப்பழம் இறக்குமதி

இந்தியாவில் இருந்து துபாய்க்கு 20 ஆயிரம் மெட்ரிக் டன் வாழைப்பழம் இறக்குமதி
துபாய் அரசின் பொருளாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
துபாய் நகருக்கு வாழைப்பழம் உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள் ஆகியவை உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இருந்து உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அதிகமாக வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜால்கன் பகுதியில் இருந்து பிரபலமான வாழைப்பழங்கள் இறக்குதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாழைப்பழத்துக்கு 5 ஆண்டுகளுக்கு முன்னரே புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.

இதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல் கட்டமாக 20 ஆயிரம் மெட்ரிக் டன் வாழைப்பழம் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த வாழைப்பழங்கள் துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிறுவனங்களில் கிடைக்கும். உலகில் வாழைப்பழம் அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு வகையான வாழைப்பழங்கள் அமீரகத்துக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த புதிய ஒப்பந்தம் காரணமாக அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக உலகில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வாழைப்பழ இறக்குமதியின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மேலும் அதிகரிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உலகின் மிக ஆழமான நீச்சல் குளம்: துபாயில், இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
துபாயில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக ஆழமான நீச்சல் குளம் இன்று (புதன்கிழமை) முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படுகிறது.
2. இந்தியாவில் 22 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் கடந்த 4 வாரங்களில் 22 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் அகர்வால் தெரிவித்துள்ளார்.
3. இந்தியா-ரஷ்யா 13 நாட்கள் கூட்டு ராணுவ பயிற்சி; ஆகஸ்ட் 1 முதல் தொடக்கம்
இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டு ராணுவ பயிற்சி வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்குகிறது.
4. இந்தியாவில் முதன்முதலில் தேயிலையை பயிரிட்டவர்
மனிதனின் அடிப்படை தேவையான தண்ணீரை அடுத்து சர்வதேச அளவில் அனைவரும் பருகும் பானம் தேநீர்.காலை எழுந்தவுடன் தேநீர் அருந்தவில்லை என்றால் அன்றைய நாளில் எதையோ இழந்துவிட்டது போல் தோன்றும் அளவுக்கு நம் வாழ்க்கையோடு ஒன்றாக கலந்துவிட்டது.
5. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இந்திய அணியில் பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் சேர்ப்பு
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்க உள்ளது.