உலக செய்திகள்

ஓமனில் புதிதாக 2,015 பேருக்கு கொரோனா; 35 பேர் பலி + "||" + Corona for 2,015 newcomers in Oman; 35 killed in one day

ஓமனில் புதிதாக 2,015 பேருக்கு கொரோனா; 35 பேர் பலி

ஓமனில் புதிதாக 2,015 பேருக்கு கொரோனா; 35 பேர் பலி
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஓமனில் நேற்று ஒருநாளில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 42 ஆயிரத்து 723 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று மட்டும் 1,072 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 880 ஆக 
உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 88.1 சதவீதமாக இருந்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக நேற்று ஒரே நாளில் 35 பேர் பலியானார்கள். இதனால் ஓமனில் கொரோனாவுக்கு 
பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 626 ஆக அதிகரித்தது. தற்போது உடல்நலக்குறைவால் 382 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா; புதிதாக 65 பேருக்கு தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.16 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17.45 கோடியாக உயர்ந்துள்ளது.
3. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.11 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17.41 கோடியாக உயர்ந்துள்ளது.
4. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.07 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17.38 கோடியாக உயர்ந்துள்ளது.
5. சீனாவில் மீண்டும் பரவி வரும் கொரோனா; புதிதாக 30 பேருக்கு தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.