கொரோனா பாதிப்பு: உலகளவில் 100ல் 43 பேர் லத்தீன் அமெரிக்கர்கள்; அதிர்ச்சி தகவல்


கொரோனா பாதிப்பு:  உலகளவில் 100ல் 43 பேர் லத்தீன் அமெரிக்கர்கள்; அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 18 Jun 2021 8:03 AM GMT (Updated: 18 Jun 2021 8:03 AM GMT)

உலக அளவில் கடந்த வாரத்தில் அதிக உயிரிழப்புகளை கொண்ட டாப் 9 நாடுகள் அனைத்தும் லத்தீன் அமெரிக்காவை சார்ந்தவையாகவே உள்ளன.



நியூயார்க்,

அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா மற்றும் மெக்சிகோ ஆகிய 5 நாடுகள் உலக அளவில் மொத்த உயிரிழப்புகளில் 50% கொண்டுள்ளன என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.  இதேபோன்று, கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களில் உள்ளன.

இவற்றில் உயிரிழப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா (6 லட்சம்), பிரேசில் (4.9 லட்சம்) மற்றும் இந்தியா (3.8 லட்சம்) ஆகியவை அடுத்தடுத்து உள்ளன.

எனினும், உலக அளவில் கடந்த வாரத்தில் அதிக உயிரிழப்புகளை கொண்ட டாப் 9 நாடுகள் அனைத்தும் லத்தீன் அமெரிக்காவை சார்ந்தவையாகவே உள்ளன.

லத்தீன் அமெரிக்காவில் கடந்த மார்ச்சில் இருந்து கொரோனா பரவல் வேகம் உச்சமடைந்து மோசமான நிலை ஏற்பட்டு உள்ளது.  உலகளவில் கொரோனா பாதிப்பு ஏற்படும் 100 பேரில் 43 பேர் லத்தீன் அமெரிக்கர்களாக உள்ளனர்.

பெரு, ஹங்கேரி, போஸ்னியா, செக் குடியரசு மற்றும் கிப்ரால்டர் ஆகிய நாடுகளில் மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது, உயிரிழப்பு விகிதங்கள் அதிக அளவில் உள்ளன.

பொலிவியா, சிலி மற்றும் உருகுவே ஆகிய நாடுகளில் கொரோனா நோயாளிகளாக 25 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிக அளவில் காணப்படுகின்றனர்.  இதனால், முதியவர்களை விட இளைஞர்களிடையே அதிக பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியளித்துள்ளது.


Next Story