உலக செய்திகள்

ஓடுதளத்தில் சறுக்கிச்சென்று விபத்தை சந்தித்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் + "||" + British Airways plane damaged after tipping forward at Heathrow

ஓடுதளத்தில் சறுக்கிச்சென்று விபத்தை சந்தித்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்

ஓடுதளத்தில் சறுக்கிச்சென்று விபத்தை சந்தித்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் ஓடுதளத்தில் சறுக்கிச்சென்று சிறு விபத்தை சந்தித்தது.
லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள ஹீட்த்ரோ சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 787 ரக டிரீம் லைனர் சரக்கு விமானம் இன்று தரையிரங்கியது. 

அதன்பின்னர் அந்த விமானம் வழக்கமாக நிறுத்தப்படும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, விமானம் ஓடுதளத்தில் சறுக்கிச்சென்று விபத்தை சந்தித்தது. விமானத்தின் முன்பாகம் ஓடுதளத்தில் சரிந்து விழுந்தது.

சரக்கு விமானம் என்பதால் பயணிகள் யாரும் அந்த விமானத்தில் இல்லை. இதனால், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பின்னர் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஓடுதளத்தில் சரிந்து கிடந்த விமானத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவந்தனர்.

ஓடுதளத்தில் தேங்கி இருந்த மழைநீரால் விமானம் சறுக்கி விபத்தை சந்தித்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் புதிதாக 24,470 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,470 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
2. இங்கிலாந்தில் புதிதாக 26,144 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,144 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
3. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 58 லட்சமாக உயர்வு
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,117 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
4. இங்கிலாந்தில் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு: புதிதாக 24,950 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,950 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
5. இங்கிலாந்தில் மேலும் 44,104-பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
இங்கிலாந்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 55,63,006- ஆக உயர்ந்துள்ளது.