உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நியூசிலாந்து பிரதமர் + "||" + New Zealand PM Ardern gets ‘pain-free’ COVID vaccine shot

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நியூசிலாந்து பிரதமர்

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நியூசிலாந்து பிரதமர்
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
வெலிங்டன்,

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக உலக நாடுகள்  தங்களது நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியைத் துரிதப்படுத்தி வருகின்றன. உலக நாட்டுத் தலைவர்களும் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அதனைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

நியூசிலாந்து நாட்டில் ஃபைசர் தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது. அந்நாட்டில் மொத்தம் இதுவரை 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.