பிரேசிலில் மீண்டும் வேகமாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு


Photo Credit: AFP
x
Photo Credit: AFP
தினத்தந்தி 19 Jun 2021 1:49 AM GMT (Updated: 19 Jun 2021 1:49 AM GMT)

உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் பிரேசில் கடந்த சில நாட்களாக முதலிடம் வகிக்கிறது.

பிரசிலியா,

தென்அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக பிரேசில் உள்ளது. மேலும் உலக அளவில் கொரோனா உயிரிழப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்திலும், கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து 3-வது இடத்திலும் பிரேசில் உள்ளது. 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பிரேசிலில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு வைரஸ் தொற்று மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 98,135- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்னிக்கை 1 கோடியே 78 லட்சத்து 02 ஆயிரத்து 176ஆக அதிகரித்துள்ளது.  கொரோனாவால் மேலும் 2,449-பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 98 ஆயிரத்து 621 ஆக அதிகரித்துள்ளது.  தற்போது தினசரி கொரோனா பாதிப்பில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி பிரேசில் முதலிடம் வகிக்கிறது. 

Next Story