கொரோனா பாதிப்பு: பாகிஸ்தானில் நடப்பு ஆண்டில் குறைந்த பட்ச எண்ணிக்கை பதிவு


கொரோனா பாதிப்பு:  பாகிஸ்தானில் நடப்பு ஆண்டில் குறைந்த பட்ச எண்ணிக்கை பதிவு
x
தினத்தந்தி 19 Jun 2021 6:05 AM GMT (Updated: 19 Jun 2021 6:05 AM GMT)

பாகிஸ்தானில் கொரோனா தொற்று விகிதம் 1.9 சதவிகிதமாக சரிந்துள்ளது

இஸ்லமாபாத்,

பாகிஸ்தானில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை இந்த ஆண்டில் இதுவரை இல்லாத வகையில் மிகவும் குறைவாக பதிவாகியுள்ளது.  இதுகுறித்து அநத நாட்டு தேசிய சுகாதார சேவை அமைப்பு தெரிவித்துள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 1,043 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, 2021-ஆம் ஆண்டின் குறைந்தபட்ச தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையாகும். இத்துடன், நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 9,46,277-ஆக அதிகரித்துள்ளது.

இதுதவிர, கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 39 பேர் அந்த நோய்க்கு பலியாகினா். இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பலி எண்ணிக்கை 21,913-ஆக உயா்ந்துள்ளது. பாகிஸ்தானில் கொரோனா தொற்று விகிதம் 1.9 சதவிகிதமாக சரிந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story