உலக வர்த்தக அமைப்பில் சீனா மீது ஆஸ்திரேலியா புகார்


உலக வர்த்தக அமைப்பில் சீனா மீது ஆஸ்திரேலியா புகார்
x
தினத்தந்தி 19 Jun 2021 11:08 PM GMT (Updated: 19 Jun 2021 11:08 PM GMT)

சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தபோது பல நாடுகள் அந்த நாட்டை விசாரணை கூண்டில் நிற்க வைக்க விரும்பின. அவற்றில் ஒன்று ஆஸ்திரேலியா.

நோய்த்தொற்று உருவானது குறித்து சீனாவிடம் விசாரணை நடத்த ஆஸ்திரேலியா தொடர்ந்து வற்புறுத்தியது. இதன் எதிரொலியாக கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒயின் மீது சீனா 218 சதவீதம் வரி விதித்தது. இதனை கொரோனா குற்றச்சாட்டுக்கான பழிவாங்கும் நடவடிக்கை என ஆஸ்திரேலியா கூறியது. ஆனால் வர்த்தக முறைகேடு காரணமாக வரி விதிப்பு அதிகப்படுத்தப்பட்டதாக சீனா தெரிவித்தது. ஆஸ்திரேலிய ஒயின் ஏற்றுமதியில் சீனா முதலிடம் வகிக்கும் சூழலில், இந்த வரி விதிப்பால் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒயின் தொழிற்சாலைகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒயின் மீதான வரி விதிப்பை ரத்து செய்யும்படி சீனாவிடம் ஆஸ்திரேலியா பலமுறை வலியுறுத்தியும் சீனா அதனை கண்டு கொள்ளவில்லை.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சீனா மீது ஆஸ்திரேலியா உலக வர்த்தக அமைப்பில் முறைப்படி புகார் அளித்துள்ளது.‌ இதுபற்றி ஆஸ்திரேலியாவின் வர்த்தக மந்திரி டான் தெஹான் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியா ஒயின் மீதான சீன வரி குவிப்பு தொடர்பாக உலக வர்த்தக அமைப்பில் நடவடிக்கை எடுப்பதன் மூலம் ஆஸ்திரேலிய ஒயின் தயாரிப்பாளர்களின் நலன்களை அரசு பாதுகாக்கும். ஆஸ்திரேலியாவின் ஒயின் தயாரிப்பாளர்களுடன் நடந்த விரிவான ஆலோசனையை தொடர்ந்து சர்ச்சையை தீர்க்கும் பணியை தொடங்க முடிவு எடுக்கப்பட்டது’’ என‌ கூறினார்.

Next Story