உலக செய்திகள்

சர்வதேச யோகா தினம்: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு + "||" + Yoga Solstice in Times Square in New York

சர்வதேச யோகா தினம்: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சர்வதேச யோகா தினம்: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
இன்று 7-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவதையொட்டி, நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
புதுடெல்லி, 

உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியம் சேர்க்கும் அரிய கலை யோகா. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றிய இந்த கலை, இப்போது உலகமெங்கும் பரவி இருக்கிறது. உடல், உள்ளம், உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இந்த கலையை உலகமெங்கும் பரப்பும் நோக்கத்தில் பிரதமர் மோடி ஐ.நா. பொதுச்சபையில் 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி பேசினார்.

அதைத் தொடர்ந்து உலக நாடுகளின் ஒருமித்த ஆதரவுடன் ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினத்தை கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. முதல் சர்வதேச யோகா தினம், 2015-ம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி கொண்டாடப்பட்டது.

இன்று (திங்கட்கிழமை) 7-வது சர்வதேச யோகா தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பொது இடங்களில் பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் யோகா பயிற்சியில் ஈடுபடுவது வழக்கமாகி உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் இந்தியாவின் துணைத் தூதரகம், நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் சர்வதேச யோகா கொண்டாட்டங்களை நடத்தப்பட்டது. 'சங்கராந்தி' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 3,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அபுதாபி, துபாய், ஓமனில் யோகா நிகழ்ச்சி
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அபுதாபி, துபாய் மற்றும் ஓமனில் நடந்த யோகா நிகழ்ச்சியில் இந்திய தூதர்கள் பங்கேற்றனர்.
2. சர்வதேச யோகா தினம்: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை
சர்வதேச யோகா தினம் நாளை கொண்டாப்பட உள்ள நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.