உலக செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் அலுவலகம் அமைக்கும் இஸ்ரேலிய செய்தி நிறுவனம் + "||" + Israel based i24News channel to open Dubai office

ஐக்கிய அரபு அமீரகத்தில் அலுவலகம் அமைக்கும் இஸ்ரேலிய செய்தி நிறுவனம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் அலுவலகம் அமைக்கும் இஸ்ரேலிய செய்தி நிறுவனம்
இஸ்ரேலிய செய்தித்தொலைக்காட்சியான ஐ24 நியூஸ் தனது அலுவலகத்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் திறக்க திட்டமிட்டுள்ளது.
ஜெருசலேம்,

2020 ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதனை தொடர்ந்து இரு நாடுகளும் தங்கள் தூதரக உறவை வலுப்படுத்த தொடங்கியுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 29-ம் தேதி இஸ்ரேலிய தூதரகம் திறக்கப்பட உள்ளது. 2 நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் இஸ்ரேலிய வெளியுறவுத்துறை மந்திரி யெய்ர் லாப்பிட் தூதரகத்தை திறந்து வைக்கிறார்.

இந்நிலையில், அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதன் மூலம் இஸ்ரேலிய செய்தி நிறுவனம் தனது கிளை அலுவலகத்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் திறக்க திட்டமிட்டுள்ளது. இஸ்ரேலின் பிரபல செய்தித்தொலைக்காட்சி நிறுவனமான ஐ24 நியூஸ் தனது அலுவலகத்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் திறக்க திட்டமிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இஸ்ரேலிய செய்தி நிறுவனம் அலுவலகத்தை திறப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஐக்கிய அரபு அமீரகத்தில் விரைவில் தங்கள் செய்தித்தொலைக்காட்சியின் அலுவலகம் திறக்கப்படும் எனவும் ஐ24 நியூஸ் தலைமை இயக்குனர் ப்ராங் மெலு தெரிவித்துள்ளார்.

மேலும், ஐ24 செய்தி தொலைக்காட்சி ஐக்கிய அரபு அமீரகத்தின் சுற்றுலாத்துறை மற்றும் வளைகுடா நாடுகளில் பிரபலமான ஆங்கில செய்தி நிறுவனமான ’கல்ஃப் செய்திகள்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இஸ்ரேலிய நாட்டின் செய்தி நிறுவனம் அலுவலகம் திறப்பது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிய பாலஸ்தீன கைதிகளில் கடைசி 2 பேரும் கைது
இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிய 6 பாலஸ்தீன கைதிகளில் பிடிபடாமல் இருந்து மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. ஹமாஸ் ஆயுதக்கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்
காசா முனையில் உள்ள ஹமாஸ் அமைப்பின் ஆயுதக்கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது.
3. இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிய 6 பாலஸ்தீன கைதிகளில் 4 பேர் பிடிபட்டனர்...
சிறையில் இருந்து தப்பிய 6 பாலஸ்தீன கைதிகளில் 4 பேரை மீண்டும் பிடித்துவிட்டதாக இஸ்ரேல் போலீசார் தெரிவித்துள்ளனர்.
4. இஸ்ரேலிய பாதுகாப்பு படை - பாலஸ்தீன போராட்டக்காரர்கள் இடையே மோதல்
இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீன போராட்டக்காரர்களுக்கும் இடையே நேற்று மோதல் வெடித்தது.
5. சிறையில் இருந்து தப்பிய பாலஸ்தீன கைதிகளின் உறவினர்களிடம் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் விசாரணை
சிறையில் இருந்து தப்பிச்சென்ற பாலஸ்தீன கைதிகளின் உறவினர்களிடம் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர்.