உலக செய்திகள்

உலகின் அழகிய சாலைகளின் பட்டியல்: அல் அய்ன் ஜெபல் ஹபீத் மலை பாதை + "||" + Jebel Hafeet Road trip in the UAE is the third most photographed road trip in the world

உலகின் அழகிய சாலைகளின் பட்டியல்: அல் அய்ன் ஜெபல் ஹபீத் மலை பாதை

உலகின் அழகிய சாலைகளின் பட்டியல்: அல் அய்ன் ஜெபல் ஹபீத் மலை பாதை
சமீபத்தில் உலக அளவில் தனியார் மோட்டார் நிறுவனத்தின் சார்பில் இன்ஸ்டாகிராமில் பயனாளர்கள் ஹேஷ் டேக் இணைத்து உலகில் உள்ள அழகிய சாலைகளை படத்துடன் கருத்து தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.

இதில் மொத்தம் 70 லட்சம் புகைப்படங்கள் பதிவிடப்பட்டது. இதில் அந்த சாலைகளின் தொலைவில் மைல் (1.6 கி.மீ) ஒன்றுக்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களின் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்த புகைப்படங்களில் ஆஸ்திரேலியாவின் டோர்குவே மற்றும் ஆலன்ஸ்போர்டு பகுதிகளை இணைக்கும் கிரேட் ஓசியன் சாலை (8 ஆயிரத்து 418 புகைப்படங்கள்) முதல் இடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பிக் சுர் சாலை (5 ஆயிரத்து 226 புகைப்படங்கள்) 2-ம் இடத்தை பிடித்தது.

இந்த நிலையில் 3-ம் இடத்தில் அமீரகத்தின் ஜெபல் ஹபீத் மலை பாதை (4 ஆயிரத்து 840 புகைப்படங்கள்) இடம் பிடித்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் பலரை கவர்ந்த அழகிய சாலை என்ற பெருமையை பெற்றுள்ளது.