உலக செய்திகள்

கொரோனா வைரசுக்கு எதிராக அப்தலா தடுப்பூசி 92.28 சதவீதம் செயல்திறன் கொண்டது: கியூபா தகவல் + "||" + Cuba says Abdala vaccine 92.28% effective against coronavirus

கொரோனா வைரசுக்கு எதிராக அப்தலா தடுப்பூசி 92.28 சதவீதம் செயல்திறன் கொண்டது: கியூபா தகவல்

கொரோனா வைரசுக்கு எதிராக அப்தலா தடுப்பூசி 92.28 சதவீதம் செயல்திறன் கொண்டது: கியூபா தகவல்
கியூபாவின் ‘அப்தலா' தடுப்பூசி 92.28 சதவீதம் செயல்திறன் கொண்டதாக பரிசோதனையில் நிரூபணமாகி உள்ளது.
ஹவானா, 

கொரோனா வைரஸ் தொற்றால் உணவு மற்றும் மருந்துகளில் கடுமையான பற்றாக்குறைகளை எதிர்கொண்ட தீவு நாடான கியூபா, இந்த ஆண்டு இறுதிக்குள் தனது சொந்த தயாரிப்பில் கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி, ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. 

இதுவரையில், கியூபாவில் ஐந்து கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கான சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில், இரண்டு தடுப்பூசிகள் இறுதி கட்ட ஆய்விலும், எஞ்சிய மூன்று தடுப்பூசிகள் பரிசோதனையிலும் உள்ளன. அதில் ஒன்று 'அப்தலா' கொரோனா தடுப்பூசி.

இந்த நிலையில் 'அப்தலா' கொரோனா தடுப்பூசி கொரோனாவை அழிப்பதில் 92.28 சதவீதம் ஆற்றல் மிக்கது என பரிசோதனையில் நிரூபணமாகியுள்ளது. கியூபாவின் மரபணு பொறியியல் மற்றும் பயோடெக்னாலஜி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்தலா 3 டோஸ் விதிமுறைகளில் 92.28 செயல்திறனை அடைந்ததுடன், உலக சுகாதார அமைப்பின் தேவைகளை பூர்த்தி செய்யும் கியூபாவின் 2-வது தடுப்பூசியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே கியூபாவின் தயாரிப்பான சோபெரனா 02 தடுப்பூசி 62 சதவீதம் செயல்திறன் மிக்கது என்பது நிரூபணமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 135 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 135 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
2. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 137 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 137 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
3. புதிதாக 141 பேருக்கு கொரோனா; 3 பேர் பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 141 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 3 போ் தொற்றுக்கு பலியாகினா்.
4. இங்கிலாந்தில் புதிதாக 39,950- பேருக்கு கொரோனா தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 39,950- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ஜூலை 19: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழ்நாட்டில் இன்று 1,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.