இந்தோனேசியாவில் புதிதாக 14,536 பேருக்கு கொரோனா பாதிப்பு


இந்தோனேசியாவில் புதிதாக 14,536 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 22 Jun 2021 11:27 PM GMT (Updated: 23 Jun 2021 12:11 AM GMT)

இந்தோனேசியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது.

ஜகாா்த்தா,

இந்தோனேசிய சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 14,536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தோனேசியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20,04,445 ஆக உயர்ந்துள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 294 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். இதனால் இந்தோனேசியாவில் கொரோனாவுக்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54,956-ஆக உயா்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி, இந்தோனேசியாவில் 18,01,761 கொரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். மேலும் 1,47,728 பேர் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story